சற்றுமுன்

இறைத்தூதரை அவமதித்த ரஹ்மத் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இறைத்தூதரை கார்டூன் வரைந்து அவமதித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது..

மோடிக்குச் சிக்கல்: சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் !

குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது..

வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் வழக்கு தொடரும் வசதி!

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் வசிக்கும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்தியா வராமலேயே உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது..

அதிவேக இணைய தொடர்பு வழங்கும் நகரங்களின் பட்டியல்: தென்கொரியா முதலிடம்

இணைய சேவை வழங்கும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள் எவ்வளவு வேகத்தில் இணைய இணைப்பிணையும் தொடர்பினையும் வழங்குகிறார்கள் என பண்டோ நெட்வொர்க்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்தது..

Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Monday, 10 October 2011

மோடிக்குச் சிக்கல்: சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் !

குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாக அணி திரள ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. 

2002 ல் கோத்ரா ரயில் அசம்பாவிதத்திற்குப் பிறகு குஜராத் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நடந்து கொண்டிருந்த வேளையில், முதல்வர் நரேந்திர மோடி காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி, "கலவரத்தை அடக்க வேண்டாம்; இந்துக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கட்டும்" எனக் கூறியதாக, ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார்.

இக்கூட்டத்தில் தான் கலந்து கொண்டதற்கு ஆதாரமாக கான்ஸ்டபிள் பந்தை வாக்குமூலம் அளிக்க மிரட்டியதாக கூறி, சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து, சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக அணி திரள ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது மோடிக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.



வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் வழக்கு தொடரும் வசதி!

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் வசிக்கும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்தியா வராமலேயே உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்திய மக்கள், தங்களுக்கு ஏதாவது பிரச்சனை எனில் இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க இந்தியாவுக்கு வர வேண்டிய சூழல் இதுவரை இருந்து வந்தது. இது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு மிக பெரிய சுமையைத் தரக்கூடியது. நினைத்த உடன் இந்தியா வரும் வசதியில்லாதவர்களுக்கு இதனால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணமுடியாத நிலை இருந்து வந்தது.

இப்பிரச்சனையைத் தீர்க்கும் விதத்தில், தற்போது வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் வசிக்கும் கேரள மக்களுக்கு முதல்முறையாக இந்தியாவில் உச்ச நீதிமன்றத்திலும் கேரள நீதிமன்றங்களிலும் இந்தியா வராமல் அங்கிருந்தபடியே வழக்கு தொடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஓமனில் செயல்பட்டு வரும் "ரஜாப் அல் கதிரி அண்ட் அசோசியேட்ஸ்" என்ற சட்ட நிறுவனம், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள நீதிமன்றங்களின் சட்ட வல்லுனர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி, வெளிநாடுகள் மற்றும் ஓமனில் வசிக்கும் கேரள மக்கள், அங்கிருந்தபடியே வழக்குத் தொடுப்பதற்கு இயலும். இதற்காக அவர்கள் இந்தியா வர வேண்டிய அவசியமில்லை. இதற்கான ஒப்பந்தம் அவர்களிடையே கையெழுத்தானது.

இவ்வசதி குறித்து ரஜாப் சட்ட நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் செபஸ்டின் கே.ஜோஸ் கூறியதாவது:
"ஓமனில் வசிப்போர், கேரள நீதிமன்றங்கள் அல்லது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்காக, ஆவணங்களைத் தூக்கிக் கொண்டு இந்தியாவுக்கும், ஓமனுக்கும் அலைய வேண்டியத் தேவையில்லை. அதற்கான பணிகளை இந்தியாவில் உள்ள எங்கள் வல்லுனர்கள் கவனித்துக் கொள்வர். அவர்கள் அங்கிருந்தபடியே இந்தியாவில் வழக்குகளைப் பதிவு செய்து நடத்தலாம்."
மேற்கண்டவாறு ஜோஸ் தெரிவித்தார்.



Tuesday, 27 September 2011

உள்ளாட்சி தேர்தல் - இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் !

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளைக் கேட்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக தேர்தல் ஆணையம் ''உள்ளாட்சித் தேர்தல்கள் சுமூகமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதோடு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க மாநில தேர்தல் ஆணையம் அனைத்து வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தேர்தலில் நன்னடத்தை விதிகள் முழுமையாக அமல்படுத்த அனைத்து அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்து அவர்களின் கருத்துக்களைப் பெற விரும்புவதாகவும் அனைத்துக் கட்சிகளும் தவறாமல் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்களைக் கூறுமாறும் ''தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.



Friday, 23 September 2011

பிரணாப் சொல்லும் " சிதம்பர " ரகசியம்

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க 2007-ல் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நிதி அமைச்சக அதிகாரிகள் குழு   நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து தற்போதைய நிதி அமைச்சக குழுவின் மூத்த அதிகாரி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த கடிதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இக்கடிதமானது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் பிரணாப் முகர்ஜி- ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதல் வெளியே தெரியவந்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 2007ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனு மீது நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் முன்னிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரத்துக்கு எதிரான ஒரு கடிதத்தை சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்தார்.

இந்தக் கடிதம் கடந்த மார்ச் 25ம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அந்த கடிதம் அனுப்பப்பட்டதாகும். நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான (Economic Affairs) பிரிவின் துணை இயக்குனர் பதவியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி எழுதிய அந்தக் கடிதம் பிரணாப் முகரிஜியின் முழு ஒப்புதலுடன் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த 14 பக்க கடிதத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் மூலம் விற்பனை செய்ய நிதியமைச்சக அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனால், அதை நிராகரித்து விட்டு 2001ம் ஆண்டு விலையிலேயே, முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்ற முறையில், 2007ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரத்தை விற்க அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா எடுத்த முடிவுக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார்.

ராசாவைத் தடுத்து, ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் மட்டுமே விற்க வேண்டும் என்று சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது.
ஆனால், அவரைத் தடுக்காததால் செல்போன் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ரூ. 1,600 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது. 2007ம் ஆண்டில் விற்பனைக்கான அனுமதி தரப்பட்டாலும், ஸ்பெக்ட்ரத்தை விற்றது 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான்.

இந்த இடைப்பட்ட காலத்தில், சிதம்பரம் நினைத்திருந்தால், இந்த விற்பனையை ரத்து செய்திருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்ததன் மூலம், அதில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை பிரணாப் முகர்ஜி முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும் தெளிவாகிறது.

நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய இந்தக் கடிதத்தை தகவல் அறியும் மூலம் விவேக் கார்க் என்பவர் பெற்றுள்ளார். அதை உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்துள்ளார். இந்த முக்கியமான கடிதத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்று பதிவு செய்து கொண்டுள்ளது.

இந்த கடிதம் குறித்து விவேக் கார்க் கூறுகையில், நிதியமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்க சாத்தியமில்லை. சிதம்பரத்துக்கும் வேறு சிலருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளதை இந்த கடிதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது என்றார்.




Wednesday, 21 September 2011

உண்ணாவிரதத்தின் மூலம் தன்னை நிரபராதி என காட்டவே மோடியின் உண்ணாவிரதம் – சங்கர் சிங் வகேலா


மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று நாள் உண்ணாவிரதம் முடித்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சங்கர் சிங் வகேலா, மாதவடியா ஆகியோர், திரளான தொண்டர்களுடன், ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமம் அருகேயுள்ள நடைபாதையில் இவர் மோடியை விட இரண்டு மணி நேரம் அதிகமாக இருந்து உண்ணாவிரதம் இருந்து முடிதுள்ளார். 
அப்போது செய்தியாளர்களிடம் வகேலா கூறியதாவது; ‘குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் உள்ள வசதிகளுடன், உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். அவரது இமேஜை அதிகரித்துக் கொள்வதற்காக, இந்த உண்ணாவிரத நாடகத்தை அவர் அரங்கேற்றுகிறார்.
இப்போது, குஜராத்தில் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது. வானத்தில் உள்ள சொர்க்கம், குஜராத்தில் தரை இறங்கிவிட்டதா? குஜராத் மதக் கலவர வழக்கில் நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இன்னும் அந்த வழக்கு முடியவே இல்லையே. உண்ணாவிரததின் மூலம் தன்னை நிரபராதி என காட்ட முயற்சிதுள்ளார்.
இந்த உண்ணாவிரதத்துக்காக, பொதுமக்களின் வரிப் பணத்தைச் செலவிட வேண்டிய அவசியம் என்ன? மேலும் 3000 க்கும் அதிகமான முஸ்லிம்களை கொன்று விட்டு இப்பொழுது இல்லை என்று மத சார்பு நாடகம் ஆடுகிறார். இவை அனைத்துமே ஏமாற்று வேலை.
குஜராத்துக்கு தொழி்ல் தொடங்க வரும் தொழிலதிபர்களை, நரேந்திர மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று கூறுமாறு  நிர்பந்திக்கப்படுவதாகவும், மோடி ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், மேலும் நான் தான்  உண்மையான் காந்தியவாதி, நான் எந்த அரசியளுக்க்காகவும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. மக்களின் நலனுக்காக மட்டுமே உண்ணாவிரதம் இருந்துள்ளேன்  என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சங்கர் சிங் வகேலா கூறியுள்ளார்.
மேலும் ராம் விலாஸ் பஸ்வான்,லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் கூறும்போது; தன்னை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தரம் உயர்த்திக் கொள்வதற்காக, உண்ணாவிரதம் என்ற அரசியல் நாடகத்தை நரேந்திர மோடி அரங்கேற்றுகிறார். மதச்சார்பற்ற தலைவராக, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன், உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பதன் மூலம், தன் மேல் உள்ள மதச் சார்பு முத்திரையை, அவர் அழித்து விட முடியாது’ என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளம் இந்த உண்ணாவிரத்தை விமர்சித்துள்ளது. அதுபற்றி அக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் கூறும்போது, “நாட்டில் 78 சதம் மக்கள் தினசரி 20 ரூபாய்தான் சம்பாதிக்கிறார்கள். 80 சதம் மக்கள் தினசரி பட்டினியால் தவிக்கிறார்கள். ஒரு வேளை சாப்பிட்டு, மீதி நேரம் பட்டினியால் தவிக்கும் அவர்களைப் பற்றி விவாதிக்க யாரும் இல்லை” மேலும் தேவை இல்லாத ஒன்று  என்று மோடியின் உண்ணாவிரதத்தை விமர்ச்சித்துள்ளார்.
குல்லா அணிய மறுப்பு: மோடி இரண்டாவது நாள் உண்ணாவிரதம் இருந்த போது, ஆமதாபாத் புறநகரில் உள்ள பிரானா கிராமத்தைச் சேர்ந்த இமாம் ஷாகி சையத் என்பவர், முஸ்லிம் குல்லாவை மோடிக்கு அணிவிக்க முயன்றார். இதை ஏற்க மறுத்த மோடி, சால்வையை மட்டும் அணிவிக்கும்படி வேண்டினார். பின்னர், சையத் சால்வை அணிவித்ததும் அதை ஏற்றுக் கொண்டார்.
இது குறித்து சையத் குறிப்பிடுகையில், “குல்லா அணிய மறுத்த மோடி என்னை அவமதிக்கவில்லை; இஸ்லாமை அவமதித்து விட்டார்” என்றார்.


தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹஜ் கோட்டாக்களுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை


தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹஜ் கோட்டாக்களுக்கு செப்.23 ஆம் தேதி வரையில் மும்பை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் இதுக் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது என்று வழக்குறைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வழக்கறிஞர் ச.சேத்னா, அரசாங்கம் பதில் அளிப்பதற்கு சற்று அவகாசம் கேட்டுள்ளார்.
வெளியுறவு அமைச்சகம் கடைசி நிமிடத்தில் விதிகளை மாற்றி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாக்களை பிடுங்கி புதிய ஹஜ் ஆப்பரேட்டர்களுக்கு கொடுத்துள்ளது என்று ஹஜ் டூர் ஆப்பரேட்டர்களின் வழக்கறிஞர் அஃப்தாப் டைமண்ட்வாலா தெரிவித்துள்ளார் இதுத்தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில்தான் மும்பை நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.


Monday, 19 September 2011

‘குஜராத் இனக்கலவர வழக்கை சீர்குலைக்க எனது வக்கீல்களுக்கு லஞ்சம் கொடுத்தார் மோடி’ – மல்லிகா சாராபாய்


குஜராத்தில் நடந்த பெரும் கலவரம் தொடர்பாக நான் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நலன் வழக்கை சீர்குலைக்க, எனது வக்கீல்களுக்கு லஞ்சம் கொடுத்தார் முதல்வர் நரேந்திர மோடி என்று பிரபல நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த பெரும் கலவரத்திற்குப் பின்னர் அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார் சாராபாய். அதில் குஜராத் கலவரத்தைத் தடுக்க மாநில அரசும், முதல்வர் நரேந்திர மோடியும் ஆக்கப்பூர்வமாக, தீவிரமாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை சீர்குலைப்பதற்காக மக்கள் பணத்தை எடுத்து எனது வக்கீல்களுக்கு லஞ்சமாக கொடுத்தார் மோடி என்று இன்று குற்றம் சாட்டியுள்ளார் சாராபாய்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அப்போது மாநில உளவுத்துறை தலைவராக இருந்த ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரை அழைத்து, எனது வக்கீல்களுக்கு வழக்கை சீர்குலைப்பதற்காக ரூ.10 லட்சம் பணம் தரும்படி உத்தரவிட்டார் மோடி.
இதுதொடர்பாக ஸ்ரீகுமார் சமீபத்தில் நானாவதி மற்றும் அக்ஷய் மேத்தா கமிஷன் முன்பு நேரில் ஆஜராகி இதுதொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் கடந்த மே மாதம் நானாவதி கமிஷன் முன்பு ஆஜரான சஞ்சீவ் பட்டும், வக்கீல்களுக்கு லஞ்சம் கொடுக்க உளவுத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்துமாறு தனக்கு மோடி உத்தரவிட்டதாக கூறியுள்ளார் என்றார் சாராபாய்.


குஜ்ஜார்களுடன் இணைந்து முஸ்லிம்களை நரவேட்டையாடிய காவல்துறை

ராஜஸ்தான் பாரத்புரில் உள்ள கோபால்கர் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில் கலவரம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் பதற்றம் நிலவுகிறது. அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் காவல்துறையையோ அல்லது மற்ற அரசு துறைகளையோ நம்ப முடியாமல் பீதியில் உள்ளனர்.
முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில் நடந்த கலவரத்தில் போலிஸ் குஜ்ஜார்களுடன் சேர்ந்து முஸ்லிம்களை கடந்த புதன் அன்று நரவேட்டை ஆடியதால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர்.
குஜ்ஜார்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் காவல்துறையும் அப்பகுதி அரசு நிர்வாகத்துறையும் முற்றிலுமாக ஒருதலைப்பட்சத்துடனும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயல் பட்டுள்ளனர் என்பதற்கு பல தெளிவான ஆதாரங்கள் உள்ளன. இக்கலவரம் ஈத்கா பள்ளி இடம் தொடர்பாக ஆரம்பித்து சிறுது நேரத்திற்குள் துப்பாக்கி சண்டை அளவுக்கு வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் காவல்துறை குஜ்ஜார்களுடன் இணைந்து முஸ்லிம்களை சரமாரியாக சுட்டதுடன் மட்டுமல்லாமல் குஜ்ஜார்கள் முஸ்லிம்களை உயிருடன் எரித்து கொலைச்செய்ததை தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.
குஜ்ஜார்களும் போலீசும் சிறுபான்மையினர் சமூகத்திற்கு எதிராக செய்துள்ள மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு தற்போது கடுமையான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்பதற்கு பல ஆதாரங்கள் கிட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
“காவல்துறை குஜ்ஜார்களுடன் சேர்ந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் நாங்கள் செய்வது அறியாது திகைத்துப் போனோம். உயிர் பிழைப்பதற்காக வேறு வழியின்றி குளங்களில் குதித்து தப்பித்து ஓடினோம். ஆனால் போலீசும் குஜ்ஜார்களும் இணைந்து மசூதியில் இருந்தவர்களின் மீது கண்மூடித்தனமாக சுட்டு கொலை செய்ததை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது” என்று கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் ஷப்னம் ஹாஸ்மி, நவைத் ஹமீத் ஆகியோர் அடங்கிய உண்மையறியும் குழுவிடம் கடந்த வியாழன் அன்று தெரிவித்தார்.
ஈத்கா பள்ளியின் அருகில் உள்ள கிணற்றில் முற்றிலுமாக எரிக்கப்பட்ட முஸ்லிம் உடல்கள் இரண்டு கிடைத்துள்ளன.
மஸ்ஜிதின் உள்ளே ஒரு பொருள் கூட உடையாமல் இல்லை. மேலும் மஜித்தின் தரையிலும் கூரையிலும் அங்கிருந்தவர்கள் அனைவரும் கடுமையாக தாக்கப் பட்டதற்கான ரத்தக் கரைகள் இருந்ததை காண முடிந்தது.
மேலும் மஸ்ஜிதின் கூரையில் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு உடல்களை இழுத்துச் சென்ற அடையாளங்கள் காணப்பட்டன.
சிலர் மஸ்ஜிதின் மேலிருந்து கீழே தள்ளப்பட்டு காயமுற்றோ அல்லது இறந்தோ  இருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் மஸ்ஜிதின் வெளிப்புறத்தில் 15  முதல் 20  வரையிலான தோட்டாக்களின் அச்சுகள் உள்ளன.
மஸ்ஜிதில் எங்கு பார்த்தாலும் குர்ஆனின் கிழிந்த பக்கங்கள், உடைந்த கண்ணாடிகள்,சுவர்கள் மற்றும் உபரி பொருட்கள் என சிதறி கிடந்தன.
மேலும் உண்மை கண்டறியும் குழு அங்கு நடந்துள்ள மனித உரிமை மீறல்களையும் போலீசும் முஸ்லிம் மக்களின் மீது தாக்குதல் நடத்தியதற்கான தடயங்களை அறிந்து கொண்டதை உணர்ந்து கொண்ட காவல்துறை உடனடியாக உண்மை கண்டறியும் குழுவினரை கைது செய்தது. மேலும் காவல்துறை தேசிய மற்றும் பிராந்திய ஊடகங்களிடம் இருந்தும் வெளி உலகத்திடம் இருந்தும் தடயங்களை மறைக்கும் வரை அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மேலும் அவர்களை அங்கு நடந்துள்ள கொடுமைகளை பார்ப்பதை விட்டும் தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
மேலும் பல்வேறு இடங்களில் இருந்து புகை வந்து கொண்டிருந்ததை கண்டு அங்கு போக முயன்றதால் அவர்களை கைது செய்தனர். அங்கு வசித்துவரும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் இங்கு நடந்துள்ள கொடுமைகளை மறைப்பதற்காக இறந்த உடல்களை எரிக்கின்றனர் என்று கூறினர். மேலும் மனித உடல்கள் எறிவதற்கான சாட்சியாக உடல்கள் எரியும் வாடை பலமாக வீசியது.
மாவட்ட நீதிபதி குமல் கிருஷ்ணா கூறியுள்ளதாவது மிகவும் மோசமாக எரிக்கப்பட்ட நிலையில் அல்வார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவர் தன்னை கலவர கும்பல் தீ வைத்து கொளுத்தியதாகவும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள பக்கத்தில் இருந்த குளத்தில் குதித்ததாகவும் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் போலீஸ் இதுவரை பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் சார்பாக முதல் தகவல் அறிக்கையை தயார் செய்யவில்லை என்பதுதான்.
மேலும் உண்மை கண்டறியும் குழுவுடன் உரையாடியதில் தெரியவந்ததாவது இதுவரை தீக்கு இரையாக்கப்பட்ட உடல்கள் பற்றி அப்பகுதியின் நிர்வாகத்துறை எந்த பதிலையும் கூறவில்லை மேலும் அவர்கள் இச்சம்பவத்தை இரு பிரிவினருக்கு இடையில் நடந்த கலவரம் என்றுதான் கூறிவருகின்றனர். மேலும் இறந்தவர்கள் காயமடைந்தவர்கள் குறித்த சரியான எண்ணிக்கைப் பற்றி தகவல்களைத் தர மறுக்கின்றனர் மேலும் எரிக்கப்பட்ட இரு உடல்களும் தீயினால்தான் இறந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் குறிப்பாக ஊடகங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் செய்தி சேகரிப்பதை விட்டும் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய இடங்களை பார்வையிடுவதை விட்டும் தடுக்கப்படுகின்றனர். எனவே இவ்விவகாரம் தொடர்பாக போலீசின் பார்வையிலிருந்து மட்டுமே செய்திகள் வெளிவரும் என்பது தெளிவாகிறது.



நரேந்திர மோடியின் கடந்த கால வரலாறை மறக்க முடியாது - கருணாநிதி!


"மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கடந்த கால வரலாறுகளை மறந்து விட முடியாது" என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, "மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இருக்கும் உண்ணாவிரதத்தில் திமுகவுக்கு உடன்பாடு உண்டு என்றாலும் நரேந்திர மோடியின் கடந்த கால வரலாறுகளை மறந்து விட முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

2002 ம் ஆண்டில் குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 3000 க்கும் அதிகமான முஸ்லீம்கள் கொல்லப் பட்ட போது மத்தியில் நடைபெற்ற பாஜக ஆட்சியில் திமுகவும் அங்கம் வகித்தது குறிப்பிடத் தக்கது.


Friday, 9 September 2011

நரேந்திர மோடியின் 1 லட்சம் கோடி ரூபாய் ஊழல் – டீஸ்டா

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை ஊழல் புரிந்துள்ளதாக சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் புகார் அளித்துள்ளார்.

குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அளித்துள்ள மனுவில் டீஸ்டா குறிப்பிட்டுள்ளதாவது: அரசு பொது கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி அரசு நிலங்களை பெரும் தொழில் அதிபர்களுக்கு பங்கீடு செய்து சொந்த லாபத்தை முதல்வர் மோடி உள்ளிட்டவர்கள் சம்பாதித்துள்ளனர்.

குஜராத்தில் நடைபெற்றுவரும் இந்த பெரும் ஊழலை சி.பி.ஐயோ அல்லது தேசிய புலனாய்வு ஏஜன்சியோ(என்.ஐ.ஏ) விசாரிக்க வேண்டும்.

டீஸ்டா இந்த புகார் மனுவுடன் மோடி மற்றும் அவரது சகாக்களின் பல்வேறு ஊழல்கள் குறித்த ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். பெரும் தொழில் அதிபர்களுக்கு அரசு நிலத்தை பங்கீடு செய்து அளித்தது பொதுநலனை கருதி அல்ல. மாறாக முதல்வரும், அமைச்சர்களும் தங்களது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

முதல்வரே நேரடியாக இந்த ஊழல்களில் ஈடுபட்டுள்ளதால் மாநில ஏஜன்சிகளின் விசாரணை சரியாக அமையாது. மாநிலத்தின் உயர் அதிகாரிகளும், சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அமைச்சர்களின் தனிப்பட்ட பணியாளர்களைப் போல பணியாற்றுகின்றனர்.

குஜராத்தில் சட்டம் முழுமையாக தோல்வியை தழுவிவிட்டது. ஊழலுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவுச்செய்யக் கூட போலீசாரால் இயலவில்லை என டீஸ்டா மேலும் தெரிவித்துள்ளார்.





Wednesday, 7 September 2011

கல்விக் கூடத்திற்க்காக ஒற்றை மனிதன் ஓங்கிய புரட்சி

  • பளபளக்கும் தரை,
  • தரமான பச்சை வண்ணப்பலகை,
  • வகுப்பறைக்குள்ளே குடிநீர் குழாய்,
  • அதில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்,
  • வெந்நீருக்கென தனித்தனி குழாய்கள்,
  • தெர்மோகூல் கூரை,
  • மின்விசிறிகள்,
  • உயர்தர நவீன விளக்குகள்,
  • கூரையில் பொருத்தப்பட்ட நவீன ஒலிபெருக்கிகள்,
  • மாணவர்கள் எழுதிப்பழக மட்டஉயர பச்சை வண்ணப்பலகை,
  • வேதியியல் உபகரணங்கள்,
  • கணித ஆய்வக உபகரணங்கள்,
  • முனைகளில் இடித்து பாதிக்கப்படாமல் மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க வட்டமேசைகள்,
  • மேசைகளின் கீழ்ப்பகுதியில் ஒருவரையொருவர் உதைக்காவண்ணம் தடுப்புகள்,
  • அமரும் நாற்காலிகளிலேயே புத்தகங்களை வைத்துச்செல்ல பெட்டி வசதி,
  • மாணவர்களின் செய்முறைத் திறமையை வெளிப்படுத்தப் பலகை,
  • அனைவருக்கும் தரமான சீருடை,
  • காலுறைகளுடன் கூடிய காலணி,
  • முதலுதவிப்பெட்டி,
  • தீயணைப்புக்கருவி,
  • உயர்திறன் வாய்ந்த கனிணி,
  • காணொளிகளை ஒளி(லி)பரப்ப டிவிடி சாதனம்.
மேலுள்ளது எல்லாம் எதோ தனியார் பள்ளிகூடத்தில் உள்ளது தான் என்று நீங்க நினைத்தால் தவறு !




இராமபாளையம் என்ற சிறு கிராம பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதியும், ஆசிரியர் ஃப்ராங்ளினின் தீவிர உழைப்பால் இந்த அரசு பள்ளி இன்று உலக தரம் வாய்ந்த பள்ளியைபோல் மாற்றப்பட்டுள்ளது என்றால் மிகையில்லை .
கல்விக்கூடத்தின் வீடியோ
 விபரங்களுக்கு :ஈரோடு கதிர்

திருக்குர்ஆன் எரிப்பு பிரச்சனையில் கொலை: குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை

திருக்குர்ஆன் எரிப்பு விவகாரத்தில் ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கமான விஷ்வஹிந்து பரிஷத்தை சேர்ந்த ராபின் ஷர்மாவின் சகோதரன் தீபக் ஷர்மா கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட ஷாஹின் சைபிக்கு ஆயுள் தண்டனைஅளிக்கப்பட்டுள்ளது.
 
இவ்வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் நீதிபதி கவுஷிக், வழக்கை அரிதான ஒன்றாக ஏற்க மறுத்துவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூபாய் 10,000/-  அபராதமும் விதித்தார்.

முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜரான ராபின் ஷர்மா, தான் 2003-ம் ஆண்டு வரை விஷ்வ ஹிந்து பரிஷத்தில் இருந்ததாகவும், 2001-ம் ஆண்டு தான்  திருக்குர்ஆனை எரித்தாக தன் மேல் பொய் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மார்ச் 2, 2005 அன்று இருச்சக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் என் கடைமுன் கூடியதையடுத்து, கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது சகோதரன் தீபக்ஷர்மா கொலை செய்யப்பட்டு கிடந்ததாக தெரிவித்தார்.






முஸ்லிம்கள் வெறும் ஓட்டு வங்கிகளே! – நரேந்திர மோடி

குஜராத் முதலமைச்சர் மோடி எப்போதும் சிந்திக்காமலும் அறிவின்மையாக பேசுவதிலும் பேர்பெற்றவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. குஜராத்தை சேர்ந்த அஜ்மேரி என்கிற கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில்தான் மீண்டும் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
அஜ்மேரி கல்வி அறக்கட்டளை நடத்திய நிகழ்ச்சியில் உரையாற்றிய  அவர் முஸ்லிம்கள் வெறும் ஒட்டு வங்கிகள் என கூறியுள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு கலவரத்தை முன்னின்று நடத்திய நரமோடி முஸ்லிம்கள் குஜராத் மாநிலத்தில் ஒன்பது சதவீதம் பேர் இருப்பதாகவும் அவர்களில் ஐந்து சதவீதம் பேர் அரசு பணி புரிவதாகவும் பிதற்றியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்கள் தங்களுடைய சொந்த வீடுகளை இழந்து, பெயர்களை மாற்றிக்கொண்டு பாதுகாப்பு இல்லாமல் தங்களுடைய மாநிலத்திலேயே ஒரு அகதிகளைப் போல் வாழ்ந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.





Monday, 5 September 2011

ஒரு கொருவர்த்திச் சுருள் 100 சிகரெட்டுகளுக்குச் சமம்: அதிர்ச்சிகர தகவல்

ஒரு கொசுவர்த்திச் சுருள் உமிழும் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்குச் சமமானது என்றும், இது இந்தியாவில் ஏராளமானோரைப் பாதிக்கிறது என்றும் ஒரு நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.

“நிறைய மக்களுக்கு இது தெரிவதில்லை. ஆனால் ஒரு கொசுவர்த்திச் சுருள் உங்கள் நுரையீரலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு 100 சிகரெட்டுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு ஈடானது. இது சமீபத்தில் மலேசியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்று நெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம் (Chest Research Foundation) இயக்குனர் சந்தீப் சால்வி கூறினார்.

அறிவியல், சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment), மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழு (Indian Council for Medical Research), இந்திய மருத்துவர் சங்கம் (Indian Medical Association) ஆகிய அமைப்புகள் இணைந்து “காற்று மாசுபடுதலும், நமது உடல்நலமும்” (Air Pollution and Our Health) என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டில் பேசும்பொழுதுதான் சந்தீப் சால்வி இந்த அதிர்ச்சிகர தகவலைத் தெரிவித்துள்ளார்.

காற்று மாசுபடுதலினால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மிகக் குறைவாக உள்ளதாக அவர் கூறினார்.
நமது இந்திய மருத்துவர்களிடம் “ஆராய்ச்சி கலாச்சாரம்” மிகக் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், உள்ளரங்க காற்று மாசுவும் உடல்நலத்திற்கு அதிக தீங்கை விளைவிக்கக் கூடியது என்று கூறினார்.

இந்த மாநாட்டில் மருத்துவர்களும், உடல்நல ஆராய்ச்சியாளர்களும் கலந்துகொண்டனர். அவர்கள் பேசும்பொழுது தலைநகர் புதுதில்லியில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு பற்றி குறிப்பிட்டனர். ஆய்வுகளின்படி டெல்லி மக்கள்தொகையில் 55 சதவீதம் பேர் முக்கிய சாலைகளுக்கு 500 மீட்டர் தள்ளியே வசிக்கின்றனர். ஆதலால் இவர்களுக்கு நிறைய நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றனர்.





Friday, 2 September 2011

ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் வழங்க தாமதமானால் அபராதம்!

ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை குறித்த காலத்தில் வினியோகம் செய்யாத அரசு அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை, வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
 
நாட்டு மக்களுக்குரிய பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்காத அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை, டில்லி சட்டசபை கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றியது. அன்னா ஹசாரே போராட்டத்தின் எதிரொலியாக, இந்த சட்டம் இம்மாதம் 15ம் தேதியிலிருந்து அமலாகிறது. பிறப்பு, இறப்பு சான்றிதழ், ரேஷன் அட்டை வழங்குதல், ஓட்டுநர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை உரிய காலத்தில் செய்யாவிட்டால், ஒவ்வொரு நாட்களுக்கும் 10 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க, ஒரிரு நாட்களுக்கு மேல் கடத்தக்கூடாது. பழகுனர் உரிமம் விண்ணப்பிக்கப்பட்ட அன்றே வழங்க வேண்டும். ரேஷன் அட்டை விண்ணப்பித்த 45 நாட்களில் வழங்கப்பட வேண்டும். பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது ஒரு வாரத்திற்கு மேல் போகக்கூடாது என, விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, டில்லி காவல்துறைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.





சந்தேக முள் மீண்டும் மோடியை நோக்கி !

குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 முஸ்லிம் இளைஞர்களை “இவர்கள் குற்றம் செய்ததை நிரூபிப்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது. இப்படி கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து சந்தேகத்தின் முள் மீண்டும் மோடியை நோக்கித் திரும்பியுள்ளது.

இந்தக் கொலை வழக்கில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்கவேண்டும் என்று 2007 டிசம்பரில் ஹரேன் பாண்டியாவின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது.

கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்ட பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாண்டியாவின் உறவினர்கள் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

2003 மார்ச் 23ம் தேதி ஹரேன் பாண்டியா அஹமதாபாதில் லோ கார்டனில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வதற்காக வெளியே வந்த பாண்டியாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்தக் கொலையைச் செய்தது முஸ்லிம்கள்தான் என்று அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து சிறையிலடைத்தது மோடி அரசு.

ஆனால் என் மகனைக் கொலை செய்தது மோடிதான் என்று பட்டவர்த்தனமாக அறிவித்தார் பாண்டியாவின் தந்தையும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் தீவிர உறுப்பினருமான விட்டல் பாய். கேசுபாய் பட்டேலின் ஆதரவாளரும், எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமாக இருந்த ஹேரேன் பாண்டியாவுக்கும், மோடிக்கும் ஒரு காலத்திலும் ஒத்துப்போனது கிடையாது.

2001 இறுதியில் முதல்வராகப் பொறுப்பேற்ற மோடிக்கு 2002 பிப்ரவரிக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அதனால் அவர் எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதியை விட்டுத் தருமாறு பாண்டியாவிடம் கேட்டார். ஆனால் பாண்டியா மறுத்து விட்டார். இதனால் இவ்விருவரின் பகைமை அதிகரித்தது.
2002ல் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் மோடிக்கும், உயர்நிலையில் இருப்பவர்களுக்கும் உள்ள பங்கு குறித்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் முன்பு பாண்டியா வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவர் மோடியின் ஆபத்தான எதிரியானார். இந்தச் சூழ்நிலையில்தான் பாண்டியா படுகொலை செய்யப்பட்டார்.





Tuesday, 30 August 2011

முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன்

முஸ்லீம்களுக்கு மட்டும் ஆளுநர் தனது மாளிகையில் ரம்ஜான் விருந்து அளிக்கும் போது இந்துக்களுக்கும் தீபாவளி விருந்து அளிக்கலாமே என இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து ராம கோபாலன் கூறியதாவது, புதுச்சேரியில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் நடந்த முதல் கூட்டத் தொடரில், புதுச்சேரியை சித்தர்கள் வாழும் ஆன்மீக பூமி என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ள நிலையில், அந்த சிறப்பை பாதுகாக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள கோவில்களை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். மேலும் அனைத்து கோவில்களிலும் உள்ள கட்டண வழிபாடுகளை நீக்க வேண்டும். அப்படி செய்தால் முதல்வர் ரங்கசாமி வரலாற்றில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. 

முஸ்லீம் மதக் குருக்களுக்கு உதவித் தொகை வழங்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் சட்டசபையில் தெரிவித்துள்ளார். அதேபோல கிராம அர்ச்சகர்களுக்கும், சிப்பந்திகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். ஆண்டுத்தோறும் முஸ்லீம்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ரம்ஜான் விருந்து அளிக்கிறார். அது மதச்சார்ப்பற்ற நிலைக்கு எதிரானது. முஸ்லீம்களுக்கு ரம்ஜான் விருந்தளிப்பது போல இந்ந்துகளுக்கும் தீபாவளி விருந்து அளிக்க வேண்டும் என்றார்.



Sunday, 28 August 2011

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது

தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்திட அன்னா ஹசாரே முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.  இதனால் இன்று காலை 10 மணிக்கு அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
 
இதுக்குறித்து அன்னா ஹசாரே கூறும்போது;  ”இது மக்களின் வெற்றி என்றும், அரசின் அறிவுறுத்தலை தான் ஏற்றுக்கொள்வதாகவும்” கூறினார்.

லோக்பாலை மாதிரியாக வைத்து எல்லா மாநிலங்களிலும் லோகாயுக்தாவை உருவாக்க வேண்டும், கீழ்த்தட்டு வரையுள்ள அரசு அதிகாரிகளை லோக்பாலின் வரையறைக்குள் கொண்டு வரவேண்டும், அனைத்துப் பிரிவினருக்கும் குடியுரிமைச் சான்று வழங்கவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை அன்னா ஹசாரே முன் வைத்திருந்தார். இவை அங்கீகரிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

மத்திய அரசு அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றவில்லை. ஆனால் இரு அவைகளிலும் கொள்கை அளவில் அவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பொது ஓட்டெடுப்புநடைபெறாது. இந்த மசோதாவைப் பரிசீலிக்கும் ஒரு நிலைக்குழுவை அரசு அமைக்கும். இந்த நிலைக்குழு மசோதாவில் தேவைப்படும் திருத்தங்களைச் செய்யும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

இந்நிலையில் லோக்பால் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் மட்டும் நடத்தினால் போதாது, அதை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது ஓட்டெடுப்பும் நடத்த வேண்டும் என்றும் புதிய நிபந்தனையை நேற்று காலை விதித்தார் ஹசாரே.
இதைத் தொடர்ந்து அன்னா தரப்புடன் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்றும் தொடர்ந்து பேச்சு நடத்தினார். அன்னா தரப்பு மிகவும் பிடிவாதம் பிடித்ததால், இந்த மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தத் தயார் என மத்திய அரசு திடீரென ஒப்புக் கொண்டது.

இதை அன்னா ஹசாரே தரப்பும் வரவேற்றது. மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி தருவதாக அன்னாவின் குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரவால் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அனைத்து எம்பிக்களும் அவையில் இருக்குமாறு காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் தங்களது எம்பிக்களையும் கூட்டணிக் கட்சி எம்பிக்களையும் கேட்டுக் கொண்டுள்ளன.

இதையடுத்து முதலில் ராஜ்யசபாவிலும் பின்னர் லோக் சபாவிலும் இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு சமர்ப்பித்து குரல் வாக்கெடுப்பு (மேசயைத் தட்டி) நடத்தியது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் அதன் நகலை எடுத்துக் கொண்டு அன்னா சார்ந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான விலாஸ் ராவ் தேஷ்முக் ராம்லீலா மைதானத்திற்கு விரைந்தார். தீர்மான நகலை அவரிடம் காட்டினார்.

இதையடுத்து அந்த நகலை கூட்டத்தினரிடம் காட்டி இந்திய மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று கூறி தனது போராட்டம் வெற்றி பெற்றதை அறிவித்தார் அன்னா ஹஸாரே. மேலும் தனது கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தான் நாளை அதாவது இன்று காலை 10 மணிக்கு உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அவர் அறிவித்தார். அதன்படி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹஸாரே.




Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More