சற்றுமுன்

இறைத்தூதரை அவமதித்த ரஹ்மத் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இறைத்தூதரை கார்டூன் வரைந்து அவமதித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது..

மோடிக்குச் சிக்கல்: சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் !

குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது..

வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் வழக்கு தொடரும் வசதி!

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் வசிக்கும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்தியா வராமலேயே உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது..

அதிவேக இணைய தொடர்பு வழங்கும் நகரங்களின் பட்டியல்: தென்கொரியா முதலிடம்

இணைய சேவை வழங்கும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள் எவ்வளவு வேகத்தில் இணைய இணைப்பிணையும் தொடர்பினையும் வழங்குகிறார்கள் என பண்டோ நெட்வொர்க்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்தது..

Monday 10 October 2011

இறைத்தூதரை அவமதித்த ரஹ்மத் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இறைத்தூதரை கார்டூன் வரைந்து அவமதித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

உலக முஸ்லிம்கள் அனைவருடைய உயிரினும் மேலாக மதிக்கும் இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்களது கார்டூன் எனும் கேலிசித்திரம் வரைந்து அதை 2010-2011 ஆம் ஆண்டு கல்வி மலரில் வெளியிட்டுள்ள முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிகுலேசன் ஸ்கூலுக்கு எதிராக மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 







இந்த முற்றுகை போராட்டத்திற்கு தலைமை வகுத்தவர் பா. அப்துல் ரஹ்மான் (மாவட்ட தலைவர்). கண்டன உரையை மாநில மேலாண்மை குழு உறுப்பினர் பக்கிர் முகமது அல்தாபி அவர்கள் உரையாற்றினார் நன்றி உரையை அன்சாரி அவர்கள் உரையாற்றினார்.பள்ளி நிர்வாகத்திற்கெதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பாகுபாடின்றி அனைவரும் ஆயிரத்திற்கும் மேலான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.  

இது போன்று சமுதாய பிரச்சனைகளுக்கு பாகுபாடின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நமதே இன்ஷா அல்லாஹ்...






 

மோடிக்குச் சிக்கல்: சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் !

குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாக அணி திரள ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. 

2002 ல் கோத்ரா ரயில் அசம்பாவிதத்திற்குப் பிறகு குஜராத் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நடந்து கொண்டிருந்த வேளையில், முதல்வர் நரேந்திர மோடி காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி, "கலவரத்தை அடக்க வேண்டாம்; இந்துக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கட்டும்" எனக் கூறியதாக, ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார்.

இக்கூட்டத்தில் தான் கலந்து கொண்டதற்கு ஆதாரமாக கான்ஸ்டபிள் பந்தை வாக்குமூலம் அளிக்க மிரட்டியதாக கூறி, சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து, சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக அணி திரள ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது மோடிக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.



வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் வழக்கு தொடரும் வசதி!

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் வசிக்கும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்தியா வராமலேயே உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்திய மக்கள், தங்களுக்கு ஏதாவது பிரச்சனை எனில் இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க இந்தியாவுக்கு வர வேண்டிய சூழல் இதுவரை இருந்து வந்தது. இது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு மிக பெரிய சுமையைத் தரக்கூடியது. நினைத்த உடன் இந்தியா வரும் வசதியில்லாதவர்களுக்கு இதனால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணமுடியாத நிலை இருந்து வந்தது.

இப்பிரச்சனையைத் தீர்க்கும் விதத்தில், தற்போது வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் வசிக்கும் கேரள மக்களுக்கு முதல்முறையாக இந்தியாவில் உச்ச நீதிமன்றத்திலும் கேரள நீதிமன்றங்களிலும் இந்தியா வராமல் அங்கிருந்தபடியே வழக்கு தொடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஓமனில் செயல்பட்டு வரும் "ரஜாப் அல் கதிரி அண்ட் அசோசியேட்ஸ்" என்ற சட்ட நிறுவனம், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள நீதிமன்றங்களின் சட்ட வல்லுனர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி, வெளிநாடுகள் மற்றும் ஓமனில் வசிக்கும் கேரள மக்கள், அங்கிருந்தபடியே வழக்குத் தொடுப்பதற்கு இயலும். இதற்காக அவர்கள் இந்தியா வர வேண்டிய அவசியமில்லை. இதற்கான ஒப்பந்தம் அவர்களிடையே கையெழுத்தானது.

இவ்வசதி குறித்து ரஜாப் சட்ட நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் செபஸ்டின் கே.ஜோஸ் கூறியதாவது:
"ஓமனில் வசிப்போர், கேரள நீதிமன்றங்கள் அல்லது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்காக, ஆவணங்களைத் தூக்கிக் கொண்டு இந்தியாவுக்கும், ஓமனுக்கும் அலைய வேண்டியத் தேவையில்லை. அதற்கான பணிகளை இந்தியாவில் உள்ள எங்கள் வல்லுனர்கள் கவனித்துக் கொள்வர். அவர்கள் அங்கிருந்தபடியே இந்தியாவில் வழக்குகளைப் பதிவு செய்து நடத்தலாம்."
மேற்கண்டவாறு ஜோஸ் தெரிவித்தார்.



உங்களது கணணியை வேகப்படுத்துவதற்கு

இன்றைய தொழில்நுட்ப உலகில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கணணியை பயன்படுத்துகின்றனர்.

நம்முடைய கணணிகள் வேகமாக இயங்கினால் மட்டுமே நாம் தேடும் தகவல்களை விரைவில் பெறலாம்.

சில கணணிகள் ON ஆவதற்கே பல மணி நேரம் எடுத்து கொள்ளும். அதனாலேயே கணணி வைத்திருக்கும் சிலர் அந்த கணணியை தொடுவதே இல்லை.

ஆனால் இனி அந்த கவலை இல்லை. இதையெல்லாம் போக்கிட ஒரு அழகிய மென்பொருள் ஒன்று உள்ளது. அந்த அழகிய மென்பொருளின் பெயர் SPEED UP MY PC.

இதை உங்கள் கணணியில் நிறுவினால் மெதுவான கணணியும் வேகம் பெறும்.




 

அதிவேக இணைய தொடர்பு வழங்கும் நகரங்களின் பட்டியல்: தென்கொரியா முதலிடம்

இணைய சேவை வழங்கும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள் எவ்வளவு வேகத்தில் இணைய இணைப்பிணையும் தொடர்பினையும் வழங்குகிறார்கள் என பண்டோ நெட்வொர்க்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்தது.

ஆய்வின் முடிவில் அதிவேக இணைப்பு தரும் நாடுகளில் முதல் இடத்தை தென் கொரியா நாட்டில் இயங்கும் நிறுவனங்கள் பிடித்துள்ளது. இங்கு சராசரியாக நொடிக்கு 2202 கிலோ பிட்ஸ் வேகத்தில் இணைய தொடர்பு இயக்கப்படுகிறது. 

ரொமானியா மற்றும் பல்கேரியா அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இவை முறையே 1,909 மற்றும் 1,611 கிலோ பிட்ஸ் வேகத்தைத் தருகின்றன.
முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகளில் உள்ள வேக இணைப்பிற்கு இடையே உள்ள வித்தியாசம் மூலம் தென் கொரியா நாடு எந்த அளவிற்கு இதில் முன்னேறியுள்ளது என்பதனை அறியலாம். 

காங்கோ நாடுதான் மிகவும் கீழாக விநாடிக்கு 13 கிலோ பிட்ஸ் வேகத்தில் இன்டர்நெட் தொடர்பினை வழங்குகிறது. பொருளாதாரத்தில் உயர் நிலையை அடைந்துள்ள நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் கனடா நாடுகளில் உள்ள இன்டர்நெட் இணைப்பின் வேகம், அதிவேகம் என்ற எல்லைக்குள் வரவே இல்லை. 

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அதிவேக இணைப்பு தரப்படுவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்கா பன்னாட்டளவில் 26 ஆவது இடத்தையே பிடித்துள்ளது. நகரங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் கூட முதல் பத்து இடங்களில் அமெரிக்க நகரங்கள் வரவில்லை. 

இந்த ஆய்வு இந்த ஆண்டில் ஜனவரி தொடங்கி ஜூன் வரை மேற்கொள்ளப்பட்டது. 224 நாடுகளில் இரண்டு கோடி கணணிகளில் இரண்டு கோடியே 70 லட்சம் டவுண்லோட் செய்யப்பட்டு நடத்தப்பட்டது. உலக அளவில் சராசரி இணைய இணைப்பு வேகம் நொடிக்கு 580 கிலோ பிட்ஸ் எனக் கண்டறியப்பட்டுள்ளது.



Saturday 8 October 2011

ரஹ்மத் ஸ்கூல் முற்றுகை போராட்டம்


  • முத்துப்பேட்டை ரஹ்மத் ஸ்கூல் வெளியிட்ட ஆண்டு மலரில் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேலி சித்திரம் வரைந்து இழிவு படுத்தி வெளியிட்டதை கண்டித்தும்.

  • பள்ளி தாளாளர் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகளை உடனே கைது செய்ய கோரியும்.

  • வெளியிட்ட புத்தகங்களை திரும்ப பெற கோரியும். 

தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் சார்பில் இன்ஷா அல்லாஹ் அன்று நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளது. 







 

Thursday 6 October 2011

தாய்லாந்து புயல் மழை: 244 பேர் பலி !

தாய்லாந்தைப் புயல் தாக்கியதைத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் சிக்கி 244 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தில் புயல் தாக்கியதால் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டு காலத்தில் தாய்லாந்தைத் தாக்கிய இயற்கை சீற்றங்களில் இதுவே மிகப் பெரிய அழிவை உண்டாக்கிய இயற்கை சீற்றம் எனக்கருதப்படுகிறது. இதனால் சுமார் 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 50,000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதுவரையிலான கணக்கில் 244 பேர் மழை வெள்ளத்திற்குப் பலியாகியுள்ளனர்.

இதுவரை நிற்காமல் பெய்து வரும் மழை, காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்வதால் மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என காலநிலை மையம் தெரிவித்துள்ளது.





'ஆப்பிள்' நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்

தனிக்கணினி (Personal Computers) உலகில் பெரும் புரட்சி செய்த 'ஆப்பிள்' நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணமடைந்தார். சிலகாலமாக, புற்றுநோயால் அவர் அவதியுற்று வந்தார்.அன்னாருக்கு 56 வயதாகிறது. 

தனது பள்ளி நண்பரான ஸ்டீபன் வோஸ்னிக்குடன் இணைந்து 'ஆப்பிள்' நிறுவனத்தைத் தோற்றுவித்த ஸ்டீவ் ஜாப்ஸ்,ஆப்பிள் கணினியை 1976ல் உருவாக்கினார். அதன்பின்னர் தனிக்கணினி உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது. 

கணினி மட்டுமின்றி, ஐ பாட், ஐ ஃபோன் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களை அறிமுகப்படுத்தி நிறுவன வளர்ச்சியை முன்னெடுத்தவர் ஸ்டீவ்.
தனது புதிய 'ஆப்பிள் 4S' ஐ ஃபோனை ஒரு நாள் முன்னதாகத்தான் ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருந்தது குறிக்கத்தக்கது. க்ளாரா, பவுல் ஜாப்ஸ் என்கிற நடுத்தர அமெரிக்கத் தம்பதிகளால் வளர்க்கப்பட்டவர்.

ஸ்டீவ் மரணம் குறித்து உலக நாடுகளின் தலைவர்களும், மைக்ரோஸாப்ட் பில்கேட்ஸ், ஃபேஸ்புக்கின் மார்க் ஜூக்கெர்பெர்க் உள்ளிட்ட தொழில் அதிபர்களும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.






Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More