சற்றுமுன்

Monday 10 October 2011

வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் வழக்கு தொடரும் வசதி!

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் வசிக்கும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்தியா வராமலேயே உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்திய மக்கள், தங்களுக்கு ஏதாவது பிரச்சனை எனில் இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க இந்தியாவுக்கு வர வேண்டிய சூழல் இதுவரை இருந்து வந்தது. இது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு மிக பெரிய சுமையைத் தரக்கூடியது. நினைத்த உடன் இந்தியா வரும் வசதியில்லாதவர்களுக்கு இதனால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணமுடியாத நிலை இருந்து வந்தது.

இப்பிரச்சனையைத் தீர்க்கும் விதத்தில், தற்போது வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் வசிக்கும் கேரள மக்களுக்கு முதல்முறையாக இந்தியாவில் உச்ச நீதிமன்றத்திலும் கேரள நீதிமன்றங்களிலும் இந்தியா வராமல் அங்கிருந்தபடியே வழக்கு தொடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஓமனில் செயல்பட்டு வரும் "ரஜாப் அல் கதிரி அண்ட் அசோசியேட்ஸ்" என்ற சட்ட நிறுவனம், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள நீதிமன்றங்களின் சட்ட வல்லுனர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி, வெளிநாடுகள் மற்றும் ஓமனில் வசிக்கும் கேரள மக்கள், அங்கிருந்தபடியே வழக்குத் தொடுப்பதற்கு இயலும். இதற்காக அவர்கள் இந்தியா வர வேண்டிய அவசியமில்லை. இதற்கான ஒப்பந்தம் அவர்களிடையே கையெழுத்தானது.

இவ்வசதி குறித்து ரஜாப் சட்ட நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் செபஸ்டின் கே.ஜோஸ் கூறியதாவது:
"ஓமனில் வசிப்போர், கேரள நீதிமன்றங்கள் அல்லது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்காக, ஆவணங்களைத் தூக்கிக் கொண்டு இந்தியாவுக்கும், ஓமனுக்கும் அலைய வேண்டியத் தேவையில்லை. அதற்கான பணிகளை இந்தியாவில் உள்ள எங்கள் வல்லுனர்கள் கவனித்துக் கொள்வர். அவர்கள் அங்கிருந்தபடியே இந்தியாவில் வழக்குகளைப் பதிவு செய்து நடத்தலாம்."
மேற்கண்டவாறு ஜோஸ் தெரிவித்தார்.



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More