தனிக்கணினி (Personal Computers) உலகில்
பெரும் புரட்சி செய்த 'ஆப்பிள்' நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்
மரணமடைந்தார். சிலகாலமாக, புற்றுநோயால் அவர் அவதியுற்று
வந்தார்.அன்னாருக்கு 56 வயதாகிறது.
தனது பள்ளி நண்பரான ஸ்டீபன் வோஸ்னிக்குடன்
இணைந்து 'ஆப்பிள்' நிறுவனத்தைத் தோற்றுவித்த ஸ்டீவ் ஜாப்ஸ்,ஆப்பிள்
கணினியை 1976ல் உருவாக்கினார். அதன்பின்னர் தனிக்கணினி உலகில் பெரும்
புரட்சி ஏற்பட்டது.
கணினி மட்டுமின்றி, ஐ பாட், ஐ ஃபோன் உள்ளிட்ட பல்வேறு
மின்னணு சாதனங்களை அறிமுகப்படுத்தி நிறுவன வளர்ச்சியை முன்னெடுத்தவர்
ஸ்டீவ்.
தனது புதிய 'ஆப்பிள் 4S' ஐ ஃபோனை ஒரு நாள் முன்னதாகத்தான் ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருந்தது குறிக்கத்தக்கது. க்ளாரா, பவுல் ஜாப்ஸ் என்கிற நடுத்தர அமெரிக்கத் தம்பதிகளால் வளர்க்கப்பட்டவர்.
ஸ்டீவ் மரணம் குறித்து உலக நாடுகளின்
தலைவர்களும், மைக்ரோஸாப்ட் பில்கேட்ஸ், ஃபேஸ்புக்கின் மார்க்
ஜூக்கெர்பெர்க் உள்ளிட்ட தொழில் அதிபர்களும் இரங்கல் செய்தி
வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment