தமிழகத்தின் பல பகுதிகளில் பெருநாள் பிறை தென் பட்டதால் முத்துப்பேட்டையில் பெருநாள் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது நகரின் பல பள்ளிவாயில்களில் தக்பீர் முழக்கம் கேட்டவண்ணம் உள்ளன.
கடை வீதிகளில் மக்கள் வெள்ளத்தினை காணமுடிகிறது கசாப்கடைகளில் மக்கள் முண்டியடித்து கறி வாங்குகிறார்கள் . வழக்கம்போல் அனைத்து பள்ளிகளிலும் பெருநாள் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
நாளை இன்ஷா அல்லாஹ் பெருநாளுக்கான தொழுகை நேரம் மற்றும் இடங்களை ஒவ்வொரு பள்ளியிலும் அறிவிக்கப்பட்டுள்ளன.
முத்துப்பேட்டை டுடே வாசகர்கள் அனைவருக்கு இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்...!
0 comments:
Post a Comment