முஸ்லீம்களுக்கு மட்டும் ஆளுநர் தனது மாளிகையில் ரம்ஜான் விருந்து அளிக்கும் போது இந்துக்களுக்கும் தீபாவளி விருந்து அளிக்கலாமே என இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ராம கோபாலன் கூறியதாவது, புதுச்சேரியில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் நடந்த முதல் கூட்டத் தொடரில், புதுச்சேரியை சித்தர்கள் வாழும் ஆன்மீக பூமி என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ள நிலையில், அந்த சிறப்பை பாதுகாக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள கோவில்களை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். மேலும் அனைத்து கோவில்களிலும் உள்ள கட்டண வழிபாடுகளை நீக்க வேண்டும். அப்படி செய்தால் முதல்வர் ரங்கசாமி வரலாற்றில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
முஸ்லீம் மதக் குருக்களுக்கு உதவித் தொகை வழங்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் சட்டசபையில் தெரிவித்துள்ளார். அதேபோல கிராம அர்ச்சகர்களுக்கும், சிப்பந்திகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். ஆண்டுத்தோறும் முஸ்லீம்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ரம்ஜான் விருந்து அளிக்கிறார். அது மதச்சார்ப்பற்ற நிலைக்கு எதிரானது. முஸ்லீம்களுக்கு ரம்ஜான் விருந்தளிப்பது போல இந்ந்துகளுக்கும் தீபாவளி விருந்து அளிக்க வேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment