சற்றுமுன்

இறைத்தூதரை அவமதித்த ரஹ்மத் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இறைத்தூதரை கார்டூன் வரைந்து அவமதித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது..

மோடிக்குச் சிக்கல்: சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் !

குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது..

வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் வழக்கு தொடரும் வசதி!

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் வசிக்கும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்தியா வராமலேயே உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது..

அதிவேக இணைய தொடர்பு வழங்கும் நகரங்களின் பட்டியல்: தென்கொரியா முதலிடம்

இணைய சேவை வழங்கும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள் எவ்வளவு வேகத்தில் இணைய இணைப்பிணையும் தொடர்பினையும் வழங்குகிறார்கள் என பண்டோ நெட்வொர்க்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்தது..

Showing posts with label கண்டுபிடிப்பு. Show all posts
Showing posts with label கண்டுபிடிப்பு. Show all posts

Friday, 23 September 2011

செயற்கைகோள் இந்திய பெருங்கடல் பகுதியில் விழ வாய்ப்பு: ரஷ்யா

நாசா அனுப்பியிருந்த செயலிழிந்த செயற்கைகோள் ஒன்று பூமி‌யை நோக்கி வந்து ‌கொண்டிருப்பதால் அது எங்கு விழும் என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ரஷ்யா விண்வெளி நிபுணர்கள் இந்திய பெருங்கடலில் விழலாம் என கருத்து ‌தெரிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய விண்வெளி நிபுணர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 1991ம் ஆண்டு வளிமண்டல ஆராயச்சிக்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, யு. ஏ.ஆர்.எஸ் எனும் 6 ஆயிரம் டன் எடை கொண்ட செயற்கை செயற்கைக்கோள் கடந்த 2005ம் ஆண்டே பூமி‌யை நோக்கி விழத்தொடங்கிவிட்டது.
இந்த செயற்கைக்கோள் இந்திய பெருங்கடல் பகுதியில் விழ வாய்ப்புள்ளது. ரஷ்ய விண்வெளி மையத்தின் செய்தி தொடர்பாளர் அலெக்ஸி ஜூலோடுஹின் தனது இணையதள பிளாக்கில் கூறியதாவது: யு.ஏ.ஆர்.எஸ் செயற்கை கோள் இந்திய பெருங்கடலின் குரோசட் தீவு பகுதிகளில் விழலாம் என எச்சரித்துள்ளனர்.
இந்த தீவுகள் தென் இந்தியாவின் 1,340 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 40 சிறு தீவுகளை கொண்ட பகுதியாகும்.
இது மடாகஸ்கர் நாட்டின் அருகேயும், தென் ஆப்ரிக்கா கட்டுப்பாட்டில் உள்ள பிரின்ஸ் எட்வர்ட் தீவுகள் அருகே உள்ளது. இப்பகுதியில் விழுந்தால் சுமார் 800 கி.மீ தொலைவிற்கு இதன் சிதறிய பாகங்கள் பரவி இருக்கும் என்றார்.



Sunday, 28 August 2011

வைரங்களினால் ஆன கிரகம் கண்டுபிடிப்பு

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச விஞ்ஞானிகள் குழுவை அமைத்துள்ளனர்.
அவர்கள் செஷிர் நகரில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இருந்து சக்தி வாய்ந்த டெலஸ் கோப் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது வான்வெளி வீதியில் வழக்கத்தை விட வித்தியாசமாக ஒரு நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். அதற்கு "புல்சர்" என பெயரிட்டு ஆராய்ச்சி செய்தனர். அது ஒரு புதிய கிரகம் என கண்டுபிடித்தனர். 


அவை சுழலும் சிறிய நட்சத்திரங்களால் ஆனது. அவை 10 மைல் சுற்றளவுக்கு ரேடியோ அலைகளை உமிழ்கின்றன. எனவே இந்தகிரகம் வைரத்தால் ஆன பாறைகளை கொண்டது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது பூமியில் இருந்து 4 ஆயிரம் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். 

 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More