சற்றுமுன்

இறைத்தூதரை அவமதித்த ரஹ்மத் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இறைத்தூதரை கார்டூன் வரைந்து அவமதித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது..

மோடிக்குச் சிக்கல்: சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் !

குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது..

வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் வழக்கு தொடரும் வசதி!

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் வசிக்கும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்தியா வராமலேயே உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது..

அதிவேக இணைய தொடர்பு வழங்கும் நகரங்களின் பட்டியல்: தென்கொரியா முதலிடம்

இணைய சேவை வழங்கும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள் எவ்வளவு வேகத்தில் இணைய இணைப்பிணையும் தொடர்பினையும் வழங்குகிறார்கள் என பண்டோ நெட்வொர்க்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்தது..

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Friday, 23 September 2011

முஸ்லிம் என்பதற்காக மாணவனை தாக்கிய இன வெறியர்கள்

தான் ஒரு முஸ்லிம் என்பதற்காக உடன் பயிலும் சக மாணவர்கள் 20 பேர் தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி தாக்கினர் என்று சிட்னி பள்ளி மாணவன் ஹமித் மாமோசாய் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பவர் ஹமித் மாமோசாய்(15). அவரை அதே பள்ளியில் படிக்கும் 20 மாணவர்கள் தாக்கியுள்ளனர்.
இது குறித்து அவர் கூறுகையில், 20 பேர் என்னைத் தாக்கினர். அடி நன்றாக அடி. அவனுக்கு இது தேவை தான். ஏய், தீவிரவாதி எங்கிருந்து வந்தாயோ அங்கேயே சென்றுவிடு. அங்கு போய் எதையாவது வெடிக்கச் செய் என்று அந்த மாணவர்கள் கூறினார்கள் என்றார்.
இந்த தாக்குதலில் ஹமித் சுயநினைவை இழந்தார். உடனே சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பெரிய காயம் ஏதும் இல்லை.
கடந்த 2 ஆண்டுகளாகவே எனது சகோதரனை இனத்தைக் கூறி திட்டி வந்துள்ளனர். இதனால் அவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளான் என்று ஹமிதின் சகோதரி நாஜியா தெரிவித்தார்.
அவன் பள்ளியில் இது குறித்து புகார் கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. தலைமை ஆசிரியர் ஏன் இப்படி இருக்கிறார், அவர் ஏன் இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்த முயற்சிப்பதில்லை. இந்த தாக்குதல் எதற்காக நடந்தது என்பது மற்ற பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஹமிதின் தாய் ஹஸ்னா தெரிவித்தார்.
ஒரு மாணவன் 20 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருவதாகவும் கல்வித் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஹமித் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கவுன்சிலிங் கொடுக்க பள்ளி ஏற்பாடு செய்துள்ளது. அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இன வெறி தாக்குதல்களை சகித்துக்கொள்ளாது.
இதற்கு முன்னதாக மாணவர்களை இனத்தின் பெயரைக் கூறி திட்டியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பொலிஸ் வழக்காகிவிட்டதால் இது குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்று அவர் மேலும் கூறினார்.





Wednesday, 7 September 2011

கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது



சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் கீழ் காணும் இணையதளத்தின் மூலம் வின்னப்பித்துகொள்ள அறிவுறுத்த படுகிறது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :செப்டம்பர் 30







 

கல்விக் கூடத்திற்க்காக ஒற்றை மனிதன் ஓங்கிய புரட்சி

  • பளபளக்கும் தரை,
  • தரமான பச்சை வண்ணப்பலகை,
  • வகுப்பறைக்குள்ளே குடிநீர் குழாய்,
  • அதில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்,
  • வெந்நீருக்கென தனித்தனி குழாய்கள்,
  • தெர்மோகூல் கூரை,
  • மின்விசிறிகள்,
  • உயர்தர நவீன விளக்குகள்,
  • கூரையில் பொருத்தப்பட்ட நவீன ஒலிபெருக்கிகள்,
  • மாணவர்கள் எழுதிப்பழக மட்டஉயர பச்சை வண்ணப்பலகை,
  • வேதியியல் உபகரணங்கள்,
  • கணித ஆய்வக உபகரணங்கள்,
  • முனைகளில் இடித்து பாதிக்கப்படாமல் மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க வட்டமேசைகள்,
  • மேசைகளின் கீழ்ப்பகுதியில் ஒருவரையொருவர் உதைக்காவண்ணம் தடுப்புகள்,
  • அமரும் நாற்காலிகளிலேயே புத்தகங்களை வைத்துச்செல்ல பெட்டி வசதி,
  • மாணவர்களின் செய்முறைத் திறமையை வெளிப்படுத்தப் பலகை,
  • அனைவருக்கும் தரமான சீருடை,
  • காலுறைகளுடன் கூடிய காலணி,
  • முதலுதவிப்பெட்டி,
  • தீயணைப்புக்கருவி,
  • உயர்திறன் வாய்ந்த கனிணி,
  • காணொளிகளை ஒளி(லி)பரப்ப டிவிடி சாதனம்.
மேலுள்ளது எல்லாம் எதோ தனியார் பள்ளிகூடத்தில் உள்ளது தான் என்று நீங்க நினைத்தால் தவறு !




இராமபாளையம் என்ற சிறு கிராம பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதியும், ஆசிரியர் ஃப்ராங்ளினின் தீவிர உழைப்பால் இந்த அரசு பள்ளி இன்று உலக தரம் வாய்ந்த பள்ளியைபோல் மாற்றப்பட்டுள்ளது என்றால் மிகையில்லை .
கல்விக்கூடத்தின் வீடியோ
 விபரங்களுக்கு :ஈரோடு கதிர்

Wednesday, 27 July 2011

சமச்சீர் கல்வியை அமல்படுத்த வாய்ப்பில்லை! அரசு வக்கீல்

சமச்சீர் கல்வி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைப்பெற்ற பரபரப்பான வாதத்தில் ‘‘சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த வாய்ப்பில்லை என்று தமிழக அரசு வழக்கறிஞர்  கூறினார். 
 
இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல் படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  தமிழக அரசு மீண்டும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த 21ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சவுகான், பாஞ்சால், தீபக் வர்மா ஆகியோர் விசாரித்து, ‘‘இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்க முடியாது.  ஜூலை 26ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும்’’ என உத்தரவிட்டனர். வரும் 2ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் தமிழக அரசின் மனுவுக்கு எதிராக பெற்றோர் தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில்  பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும். கடந்த 2 மாதங்களாக மாணவ, மாணவிகள்  பாடங்களை படிக்க முடியவில்லை. குறிப்பாக 10ம் வகுப்பு மாணவர்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே உடனே சமச்சீர் புத்தகத்தை வழங்க உத்தரவிட வேண்டும். தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற  உத்தரவை ரத்து செய்யக்கூடாது’’ என்று அதில் கூறியுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சமச்சீர் கல்வி வழக்கின் இறுதி விசாரணை நேற்று  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சவுகான் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக ஆஜராகிய மூத்த வக்கீல் பி.பி.ராவ் சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. தேசிய அளவிலான தரத்துடன் சமச்சீர் கல்வியை மாணவர்களுக்கு வழங்க உயர்மட்டக் குழு அமைத்து இதுகுறித்து ஆராய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு போதிய கால அவகாசம் தேவை. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சமச்சீர் பாடபுத்தகங்கள் தரமானதாக இல்லை’’ என்றார். 

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு , சமச்சீர் கல்வியை தள்ளிவைத்ததாக கூறியுள்ளீர்கள். அதை எந்த ஆண்டு அமுல்படுத்துவோம் என்று கூறவில்லை; அதே சமயம்,  சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளை கூறிவிட்டு, 2004ம் ஆண்டு  பாடப்புத்தகத்தை அமல்படுத்த திட்டமிடுவது  ஏன்? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு விரிவாக நாளை (இன்று) பதில் அளிப்பதாக அரசு வக்கீல் கூறினார். இதை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை நாளை  தொடரும் என்று உத்தரவிட்டனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More