சற்றுமுன்

இறைத்தூதரை அவமதித்த ரஹ்மத் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இறைத்தூதரை கார்டூன் வரைந்து அவமதித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது..

மோடிக்குச் சிக்கல்: சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் !

குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது..

வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் வழக்கு தொடரும் வசதி!

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் வசிக்கும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்தியா வராமலேயே உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது..

அதிவேக இணைய தொடர்பு வழங்கும் நகரங்களின் பட்டியல்: தென்கொரியா முதலிடம்

இணைய சேவை வழங்கும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள் எவ்வளவு வேகத்தில் இணைய இணைப்பிணையும் தொடர்பினையும் வழங்குகிறார்கள் என பண்டோ நெட்வொர்க்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்தது..

Showing posts with label கிளர்ச்சி. Show all posts
Showing posts with label கிளர்ச்சி. Show all posts

Monday, 12 September 2011

எகிப்தில் இஸ்ரேல் தூதரகம் தகர்ப்பு: அவசரநிலை பிரகடனம்!

எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தைப் பொதுமக்கள் அடித்துத் தகர்த்தனர். இதனைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டத்தையடுத்து, எகிப்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 
எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இஸ்ரேலின் தூதரக அலுவலகம் உள்ளது. ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தவரை இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் இடையே நல்லுறவு இருந்து வந்தது. முபாரக்கிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இஸ்ரேலுடனான உறவுக்கு எதிராக பொதுமக்கள் அவ்வபோது கிளர்ச்சி செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் எகிப்து ஆயுத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் எகிப்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இது எகிப்து மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.   நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை முடிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் கெய்ரோவிலுள்ள சுதந்திர மைதானத்தில் திரண்டு அரசியல் சீர்திருத்தம், இஸ்ரேலுடனான உறவு முறித்தல் போன்ற கோரிக்கைகளை விடுத்தனர்.


அவர்களின் போராட்டம் சிறிதுநேரத்திலேயே இஸ்ரேலுக்கு எதிரான கோபத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. பக்கத்திலிருந்த இஸ்ரேல் தூதரகத்துக்குச் சென்ற பொதுமக்கள், அங்கு புகுந்துத் தாக்குதல் நடத்தினர். தூதரக அலுவலகத்தின் கட்டிடடம் இடிக்கப்பட்டது. தூதரகத்திலிருந்த 6 பணியாளர்களைப் பொதுமக்கள் சிறை வைத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முற்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் காவல்துறையினரையும் தாக்கினர். தூதரக அலுவலகத்துக்குத் தீவைக்கப்பட்டது.


கலவரத்தை க்கட்டுப்படுத்த முடியாததால் நூற்றுக் கணக்கான அதிரடி கமாண்டோ ராணுவ வீரர்கள் சுதந்திர மைதானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் 6 இஸ்ரேலிய பாதுகாவலர்களையும், தூதரக அலுவலர்களையும் மீட்டனர். அதைத் தொடர்ந்து தூதர் யிட்சாக் தனது குடும்பத்தினர் மற்றும் 80-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் ஊழியர்களுடன் வெள்ளிக்கிழமை இரவே விமானம் மூலம் இஸ்ரேல் திரும்பினார். 


இஸ்ரேலுக்கு எதிரான மக்களின் கோபம் நேற்றும் தொடர்ந்தது. நேற்று நடந்த கலவரத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை 19 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு வரை கலவரம் தொடர்ந்து நடந்தது. 


இதனால் கெய்ரோ நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். "இது மோசமான சம்பவம்" என்று கூறியுள்ளார். இதற்கிடையில் "இஸ்ரேல் தூதரகத்துக்கு எகிப்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

அரபு நாடுகளில் ஜோர்டானுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் அரசாங்கரீதியாக நெருக்கமும் நட்புறவும் கொண்டுள்ள நாடு எகிப்து என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியின் அடிப்படை காரணங்களுள் ஒன்று, இஸ்ரேலுடனான ஹோஸ்னி முபாரக்கின் நெருங்கிய உறவு என்று கூறப்படுகிறது. எகிப்தும் இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொண்டால், அது இஸ்ரேலுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் எனக்கருதப்படுகிறது.




Tuesday, 26 July 2011

யெமனில் குண்டுவெடிப்பு:மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட எட்டுபேர் பலி

அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டம் வலுப்பெற்று வரும் யெமன் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பில் மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட எட்டுபேர் மரணமடைந்தனர்.

இரண்டு அதிகாரிகள், மேஜர், லெஃப்டினண்ட் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். யெமனின் கடலோர பிரதேசமான ஏடனில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அல்காயிதா இயக்கம் இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அப்யான் மாகாணத்திலிருந்து ராணுவம் வாபஸ் பெற இருக்கவே இத்தாக்குதல் நடந்துள்ளது.

அல்காயிதா ஆதரவுப்பெற்ற போராளிகளுக்கு எதிரான போருக்கு கூடுதல் ராணுவத்தினரை அனுப்பியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரபு நாடுகளில் அல்காயிதாவின் செல்வாக்கு பெற்ற பகுதியாக யெமன் கருதப்படுகிறது.

யெமன் நாட்டில் மக்கள் எழுச்சி கிளர்ந்தெழுந்துள்ள வேளையில் தெற்கு யெமனில் போராளிகள் சவாலாக விளங்குகின்றனர். மற்றொரு சம்பவத்தில் தெற்கு யெமனின் தெய்ஸில் நடந்த மோர்ட்டார் தாக்குதலில் 25 வயதான பெண்ணும், 10 வயதான குழந்தையும் கொல்லப்பட்டனர். இதற்கிடையே தாக்குதலில் காயமுற்று சவூதியில் சிகிட்சைப்பெற்று வரும் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் நாட்டிற்கு திரும்புவதை தடுப்பதற்கான முயற்சியை எதிர்கட்சியினர் துவக்கியுள்ளனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More