கான்பெர்ரா:ஃபேஸ் புக்கில் தனது பிறந்த நாள் விருந்துக்கு விடுத்த அழைப்பை 2 லட்சம்பேர் ஏற்றுக் கொண்டதால் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த மாணவியொருவர் அந்த நிகழ்ச்சியை ரத்துச் செய்துவிட்டார்.
தனது வகுப்புத் தோழியர்களை மட்டுமே அழைக்கும் நோக்கில்தான் விருந்திற்கான அழைப்பை இவர் ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்தார். நேரடியாக அழைக்க போதிய அவகாசம் இல்லாததால் ஃபேஸ்புக்கில் அழைப்பதாக தெரிவித்திருந்தார் அவர். ஆனால், இவரது அழைப்பு மேலும் பலரை சென்றடைந்தது. ஆனால், அழைப்பை பெற்றவர்களில் 2 லட்சம் பேர் இதனை ஏற்றுக்கொண்டு விருந்தில் கலந்துக் கொள்வதாக தெரிவித்திருந்தனர்.
2 லட்சம் பேருக்கு விருந்தா? அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் போலீஸாரின் உதவியை நாடினர். தனது மகளுக்கு ஃபேஸ்புக் செட்டிங்ஸில் அனுபவம் குறைவுதான் இந்த சிக்கலுக்கு காரணம் என மாணவியின் தந்தை போலீஸாரிடம் விளக்கம் அளித்துள்ளார்.
அழையா விருந்தாளிகள் என கேள்விப்பட்டிருப்போம். ஆனால், நம்மை அறியாமலேயே நமது அழைப்பு சமூக இணையதளங்கள் வாயிலாக பலருக்கும் சென்றடைய வாய்ப்புள்ளது.
விருந்து ஏதேனும் ஏற்பாடுச் செய்தால் நேரடியாக சென்று அழையுங்கள். சோம்பலின் காரணமாக இவ்வாறு நீங்களும் சமூக இணையதளங்களில் போஸ்ட் செய்தால் ஆஸ்திரேலிய மாணவியைப் போல் சிக்கலில் மாட்டவேண்டிய சூழல்தான் ஏற்படும். ஜாக்கிரதை!
0 comments:
Post a Comment