மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அடுத்து மாநிலம் முழுதும் பரவலாக தி.மு.க.வினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
முத்துப்பேட்டையில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்த ஸ்டாலினை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் முத்துப்பேட்டை பகுதியில் பதற்றம் எழுந்தது பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பின்பு காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். பின்பு அவர்களை விடுவிக்கப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக தி.மு.க.வினரின் போராட்டங்களால் பதற்றம் எழுந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் தி.மு.க.வினர் பெருமளவில் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
0 comments:
Post a Comment