நார்வேயில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வைத்தும், துப்பாக்கியால் சுட்டும் 93 பேரைக் கொன்ற தீவிரவாத இயக்கத்தை சார்ந்த ஆண்டர்ஸ் பெரிங் பிரீவிக் தன்னை பொதுமக்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளான்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் பிரதமர் அலுவலக கட்டடம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வெடித்ததில் 7 பேர் இறந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற 2 மணி நேரத்தில் தலைநகரின் அருகே உள்ள உடோயா தீவில் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை போலீஸ் உடையில் வந்த இளைஞர் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.
இந்த இரு சம்பவத்துக்கும் காரணமான ஆண்டர்ஸ் பெரிங் பிரீவிக் என்ற 32 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாக தனது வழக்கறிஞர் கெர் லிப்பெஸ்டாட் மூலம் தெரித்துள்ள பிரீவிக் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணிக்கு டவுன்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் தன்னை விசாரிக்க வேண்டும் என்ற பிரீவிக்கின் விருப்பத்தை அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதுகுறித்த முடிவை நீதிபதி அறிவிப்பார் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பிரீவிக்கிற்கு இரு விருப்பங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினேன் என்று தெரிவிப்பதற்காக பொதுமக்கள் மத்தியில் வைத்து தன்னை விசாரிக்க வேண்டும்.
மற்றொன்று விசாரணையின் போது போலீஸ் சீருடையில் வர அனுமதிக்க வேண்டும் என்பதாகும் எனத் தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக லண்டன் முகவரியிட்ட 1,500 பக்க அறிக்கை ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது தலைவர் இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்டு.
"இஸ்லாத்தை பொறுத்துக்கொள்ளும் "ஐரோப்பிய நாடுகளை கவிழ்ப்பதற்காக என்னைப் போல 80 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளதாக "தி டெலிகிராப்" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்த லண்டனுக்கு பிரீவிக் எப்போது வந்து சென்றான் என்பது பற்றி ஸ்காட்லாந்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
0 comments:
Post a Comment