சற்றுமுன்

Saturday, 23 July 2011

முத்துப்பேட்டை ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற கோரிக்கை

imagesCA14PZDBமுத்துப்பேட்டையில் பழைய பஸ் ஸ்டாண்ட், ஆசாத் நகர், பட்டுக்கோட்டை ரோடு, மண்ணை ரோடு, திருத்துறைப்பூண்டி ரோடு ஆகிய இடங்களில் நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை கடைக்காரர்களே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினரும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் நேரில் சென்று அறிவுறுத்தினர்.
இதனையடுத்து ஒரு சில கடைகள் மட்டுமே ஆக்கிரமிப்பு கொட்டகைகளை அகற்றினர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் அப்பகுதி ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது எனகே ஆக்கிரமிப்புகளை அகற்றவும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போதிய போலீசாரை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி திராவிடமணி கூறுகையில் தேர்தல் காரணமாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தற்போது ஆக்கிரமிப்புகள் அதிமாகியிருப்பதால் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More