சற்றுமுன்

Saturday 23 July 2011

சவூதிஅரேபியாவின் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக ஆம்னஸ்டி

சவூதி அரேபியா தயாராக்கி வரும் பயங்கரவாத தடுப்பு சட்டம் மக்களின் வாயை மூடுவதற்கான முயற்சி என ஆம்னஸ்டி இண்டர்நேசனல் கூறியுள்ளது. சட்டத்தின் வரைவை பி.பி.சி வெளியிட்டுள்ளது.

Amnesty-Internationalமனித உரிமைகளில் கட்டுப்பாட்டை ஏற்படுத்த சவூதிஅரேபியா அரசின் முயற்சி என ஆம்னஸ்டி குற்றம் சாட்டியுள்ளது. விசாரணை இல்லாமலேயே நீண்டகாலம் சிறையில் அடைப்பது, சட்ட உதவியை தடுத்தல், மரணத்தண்டனை அளிப்பதை அதிகரிப்பது ஆகிய பிரிவுகளை உட்படுத்தியுள்ளது இந்த சட்டம்.

எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்குவது அல்ல, தீவிரவாதத்தை தடுப்பதற்கே இந்த சட்டம் என சவூதி அரேபியாவின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், அரசு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை.

நாட்டிற்கு எதிராக செயல்படுவது, நாட்டின் ஒற்றுமையை தகர்ப்பது ஆகியன தீவிரவாத செயல்களாக கருதப்படும். சட்டத்தை மீறுபவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை அளிப்பதற்கும் சட்டப்பிரிவு உள்ளது. நாட்டின் ஒற்றுமையை தகர்ப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கப்படும்.

சட்டத்தின் வரைவில் கூறப்படும் சட்டப்பிரிவுகளில் முரண்பாடு இருப்பதாக ஆம்னஸ்டியின் மேற்காசிய ஊடக அதிகாரி ஜேம்ஸ் லிஞ்ச் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தை தடுப்பது என்ற பெயரால் கருத்து சுதந்திரத்திற்கு தடை போட அரசு திட்டமிட்டுள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More