சற்றுமுன்

Saturday 23 July 2011

முத்துப்பேட்டைக்கு மயில்சாமி அண்ணாதுரை வருகை

முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பதினைந்தாம் ஆண்டு விழாவும் முன்னாள் மாணவிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தொடக்க விழாவும் நடக்கவிருக்கிறது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் வருகை தர இருக்கிறார்கள்.

மயில்சாமி அண்ணாதுரையை பற்றி:
இவர் முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம்
அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர். இவர் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் இளங்கலைக் கல்வியைக் கற்றார். கோயம்புத்தூர் பூ.சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலில் முதுமாணிப் பட்டம் பெற்றார்.

அண்ணாதுரை இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப்பெற்றுள்ளார். அண்ணாதுரை தனது விடு முறை நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் செலவிடுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார். மாணவர்களும் அவரது பேச்சை மிகவும் ஆவலுடன் கேட்கின்றனர். அதனால் இவர் இளைய கலாம் என்று அன்புடன்
அழைக்கப்படுகிறார்.
 
இந்த பெருமைக்குரிய அண்ணாதுரை அவர்கள் வருகிற 2-7-2011 சனிக்கிழமை முத்துப்பேட்டையில் உள்ள ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவும், முன்னாள் மாணவிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தைத் தொடங்கி வைக்கவும். மேலும் சென்ற கல்வியாண்டில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்குப் பரிசளித்துப் பாராட்டவும் உள்ளார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More