முத்துப்பேட்டை ரஹ்மத் நகரில் சிமென்ட் சாலை போடும் பனி கடந்த வருடம் டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது. இந்த சாலை போடும் பனி மூன்று வாரத்திற்கு முன்பு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சாலை போடும் பனி காலம் ஆறுமாத காலமே. இந்த மாதத்துடன் ஆறுமாத காலம் நிறைவடைந்து விட்டது ஆனால் இதுவரை சாலை பணியை முடிக்கவில்லை. இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் காரணம் கேட்டால் சரியான காரணத்தை நிர்வாகிகள் கூற மறுக்கின்றனர்.
முத்துப்பேட்டையில் ஒரு சில இடங்களில் சிமென்ட் சாலை போடும் பனி நடந்து கொண்டு தான் இருக்கிறது என்ன காரணத்தாலோ இந்த சாலையை மட்டும் கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் அந்த ரோட்டில் அவசரத்திற்கு கார் செல்லவோ பைக் செல்லவோ ஏன் நடந்து கூட செல்ல முடியவில்லை அந்த அளவுக்கு மோசமாக உள்ளது இதை எப்போது சரி செய்ய போகிறார்கள் என்று மன வேதனையுடன் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். முத்துப்பேட்டை வாசிகளுக்கு: நம்ம ஊரில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நம்ம மக்களை பொறுத்தவரை யாரும் கண்டு கொள்வதில்லை நமக்கென்ன என்று போவதால் தான் அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொண்டு மக்களுக்கு செய்யாமல் சுருட்டிக்கொள்கின்றனர்.
இனியாவது மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பார்களா….?
இனியாவது மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பார்களா….?
0 comments:
Post a Comment