திருவாரூர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனை கைது செய்ய வந்தனர் போலீசார். அப்பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், என்ன வழக்கு என்று கூறாமல் ஒப்படைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினரின் எதிர்ப்பை மீறிய போலீசார் பூண்டி கலைவாணனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அப்படியானால் தானும் வருகிறேன் என்று கூறி போலிஸ் வாகனத்தில் மு.க.ஸ்டாலின் ஏறினார். பூண்டி கலைவாணனுடன் மு.க.ஸ்டாலினும் போலிஸ் வாகனத்தில் சென்றுள்ளதால் அப்பகுதியில் உள்ள தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்துறைப்பூண்டி போகும் வழியில் உள்ள ஆலத்தம்பாடியில் பூண்டி கலைவாணனை போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் மதிவாணன் மற்றும் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 300 பேர் காவல்துறை வாகனத்தில் ஏறினர். போலீசார் வாகனம் திருவாரூர் சென்றடைந்தது.
திருவாரூரில் அம்மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணனை மட்டும் வைத்துக்கொண்டு, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் சுமார் 300 பேரையும் போலீசார் விடுவித்தனர்.
0 comments:
Post a Comment