பிரபல இணைய சேவை நிறுவனமான கூகுள் தனது ஆராய்ச்சிகளைச் சோதனை அடிப்படையில் செயல்படுத்திப் பார்ப்பதற்காக google labs என்ற இணைய நிரலிகளைச் சோதித்துப் பார்க்கும் தளத்தை நிரந்தரமாக நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக கூகிலின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவரான பில் காஹ்ரன் தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளார்.
"பெருமளவிலான ஆய்வுகளைச் செயல்படுத்துவதற்கு முன்பாக அதன் மாதிரியை கூகுள் லேப்ஸில் பயன்படுத்தி, சாதக பாதகங்களை அளவிட்டு நடைமுறைப்படுத்துவது, மிகப்பெருமளவிலான வாய்ப்புகள் எதிர்நோக்கியுள்ள நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கூகுள் முதன்மை செயல்திட்ட தலைவர் லாரி பாகே கருதுவதுபோல்,வருவாய் வழிகளை முன்னெடுத்துச்செல்லும் முயற்சிகளின் ஒரு பகுதியே இது" என்று அவர் கூறினார்.
கூகுள் லேப்ஸ் மூலம் உருவானவைதான் கூகுள் வரைபடம் (Maps) மற்றும் கூகுள் செய்தியோடை (Reader). கணினி குறித்த செய்திகளுக்கான PC WORLD செய்தியின்படி கூகுள் தனது ஊழியர்களின் வேலையில் 20% ஐ தனிப்பட்ட ஆய்வுகளுக்காகவும் கண்டுபிடிப்புகளுக்காகவும் தொடர்ந்து ஒதுக்கீடு செய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் லேப்ஸில் ஜீமெயில் மற்றும் கூகுள் வரைபட சேவைகளுக்கான ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுமைகளைச் செயல்படுத்துவதில் கூகுள் தொடர்ந்து ஈடுபடும் என்றாலும் அவற்றை மிகப்பெருமளவில் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூகுள் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment