சற்றுமுன்

Saturday 23 July 2011

அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் குற்றவாளி – என்.ஐ.ஏ

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அவ்வமைப்பின் மூத்த தலைவருமான இந்திரேஷ் குமாரும், ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூரும் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
indresh-kumar_l_1293083073 
2005 ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி ஜெய்ப்பூர் குஜராத்தி சமாஜத்தில் நடந்த சதி ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை வகித்தது இந்திரேஷ் குமார் என என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

குண்டுவெடிப்பு ரகசியம் வெளியாகிவிடும் என பயந்து ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் கொலைச்செய்த அவ்வமைப்பின் பிரச்சாரக் சுனில்ஜோஷி, குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகள் லோகேஷ் சர்மா, ராம்ஜி கல்சங்க்ரா, சந்தீப் டாங்கே, பிரக்யா சிங் தாக்கூர் ஆகியோரும் சதி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
போலீஸிடமி சிக்காமல் இருக்க பல்வேறு இயக்கங்களில் சேர்ந்து செயல்பட இந்திரேஷ் குமார் இவர்களுக்கு உத்தரவிட்டதையும் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் இந்திரேஷ் குமாருக்கு தொடர்பிருப்பதை முன்னர் இவ்வழக்கை விசாரித்த ராஜஸ்தான் மாநில ஏ.டி.எஸ்ஸும் கண்டிபிடித்தது. 2007-ஆம் ஆண்டு அஜ்மீர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கிலும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவரான இந்திரேஷ் குமார் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More