சற்றுமுன்

Tuesday, 9 August 2011

புதிய சிப்: எய்ட்ஸ் நோயை கண்டறிய 15 நிமிடம் போதும்

எய்ட்ஸ் நோய் தாக்கியுள்ளதா? என்பதை ரத்த பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. அதற்காக பல நாட்கள் காத்து இருக்க வேண்டி உள்ளது.
இதனால் பயமும், மன அழுத்தமும் ஏற்படுகிறது. தற்போது அதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதில்லை. 

ஏனெனில் பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்த 15 நிமிடத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பை அறிய முடியும். எம் சிப் மூலம் இதை கண்டறிய முடியும். இது கிரீடிட் கார்டு போன்று இருக்கும். 

அதில் ரத்தம் செலுத்துப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. இதன் மூலம் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும். எய்ட்ஸ் நோய் மட்டுமின்றி பால்வினை நோய் பாதித்துள்ளதா எனவும் தெரிந்து கொள்ளலாம்.
இதை நியூயோர்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கிசாலி, சுவாண்டா நகரங்களில் இந்த எம் சிப் மூலம் எய்ட்ஸ் பரிசோதனை நடத்தினார்கள். அதில் 100 சதவீதம் பேரிடம் எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஒரு சிப்பின் விலை ரூ.45 தான். இதை எங்கும் எளிதாக எடுத்து செல்ல முடியும். இந்த பரிசோதனையை கர்ப்பிணி பெண்களிடம் நடத்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More