சற்றுமுன்

Tuesday 23 August 2011

கடலுக்கு அடியில் மூழ்கிய கப்பலில் எடுக்க எடுக்க பொக்கிஷங்கள்

ஆப்ரிக்காவின் தென் பகுதியில் உள்ள நாடு நமீபியா. இங்குள்ள விண்ட்ஹுக் நகருக்கு அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த 2 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இதில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த போர்ச்சுகீசிய கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் விபத்துக்குள்ளான கப்பல்கள் தான் அகழ்வாராய்ச்சியின் போது கிடைக்கும். ஆனால் இந்த கப்பல் சிறிதும் சேதமில்லாமல் இருப்பது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடலில் கப்பல் மூழ்கி 500 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆனால் கப்பலின் ரகசிய அறையில் வைக்கப்பட்ட அரிய பொக்கிஷங்கள் அழியாமல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். 

கப்பலின் அறையில் இருந்து 2,266 தங்க, வெள்ளி காசுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பல பொக்கிஷங்கள் கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பதால் தீவிர ஆய்வு நடந்து வருகிறது.

கப்பல் மூழ்க காரணம் எதிர்பாராத விபத்தா, திட்டமிட்ட சதியா, கொள்ளையடிக்கும் நோக்கில் தாக்கப்பட்டதா என்றும் ஆய்வு நடக்கிறது. கப்பலில் இருந்து கிடைத்துள்ள பொக்கிஷங்கள் நமீபியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. 

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் ஹாரிசன் டவுன்ஷிப் நகரில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. நடுவானில் ஹெலிகாப்டரில் இருந்து குட்டி விமானத்துக்கு தாவும் சாகசத்தை டாட் கிரீன் என்ற வீரர் செய்தார். விமானத்தில் இறங்கியவர் மீண்டும் ஹெலிகாப்டருக்கு தாவும் நேரத்தில் எதிர்பாராவிதமாத பிடி நழுவியது. 200 அடி உயரத்தில் இருந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More