முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை
ஊர்வலம் வரும் 10ம்தேதி நடக்கிறது. இதையொட்டி 2 ஆயிரம் பாதுகாப்பு படை
வீரர்களின் பாதுகாப்பு போடப்படுகிறது என்று மத்திய மண்டல ஐஜி மாஹாலி நேற்று
கூறியுள்ளார்.
முத்துப்பேட்டையில்
விநாயகர் சிலை ஊர்வலம் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஊர்வலம்
ஜாம்புவானோடை சிவன் கோயிலில் துவங்கி அது வரும் பாதை உள்பட அனைத்து இடங்களை
மத்திய மண்டல ஐஜி மாஹாலி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், கடந்த ஆண்டு ஊர்வலம் நடை பெற்ற பாதையிலே இந்தாண்டு ஊர்வலம்
நடைபெறும். இந்தமுறை கூடுதலாக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு
கண்காணிக்கப்படவுள்ளது.
கடந்த முறை
நடை பெற்ற ஊர்வலத்தின் போது இந்து முன்னணியினர் இஸ்லாமியர்களின் வீடுகளின்
மீதும் முஸ்லிம் லீக் எம்.பி அப்துல் ரஹ்மான் வீட்டின் மீதும் கற்களை வீசி
கலவரத்தில் ஈடுபட்டனர் என்பதும் அதனால் பலர் காயமடைந்தனர்
குறிப்பிடத்தக்கது.
இதனால்
இம்முறை சுமார் 2 ஆயிரம் சிறப்புக் காவல் படையினர் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்படவுள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைதியாக நடத்த அனைத்து
தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று ஐஜி மஹாலி
கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது தஞ்சை சரக துணை காவல் தலைவர்
ரவிக்குமார், திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் சேவியர் தன்ராஜ், துணை
மாவட்ட கண்காணிப்பாளர்கள் ராஜேந்திரன், கோபி ஆகியோர் உடனிருந்தனர்.
0 comments:
Post a Comment