பத்தாண்டுகளுக்கு
மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய
மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை விடுத்தார்.
இது
குறித்து சட்டப்பேரவையில் அவர் பேசியபோது சிறையில் இருப்பதாலேயே ஒருவர்
மனிதர் என்ற தகுதியை இழந்து விடுவதில்லை. சிறைச்சாலைகள் சீர்திருத்தக்
கூடங்களாக இருக்க வேண்டும். தமிழ்நாடு, மராட்டியம், ஆந்திரம் போன்ற
மாநிலங்களில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் வழக்கம் உள்ளது.
தமிழகத்தில்
அண்ணா போன்ற பெருந்தலைவர்களின் பிறந்த நாளில் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
வழங்கப்பட்டு வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு விழாவை
முன்னிட்டு 1,405 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அப்போது மதுரையில்
கவுன்சிலர் லீலாவதியில் கொலையில் சிக்கியவர்களையும் விடுதலை செய்தனர்.
அதற்காகவே
பொதுமன்னிப்பு வழங்க 10 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்க வேண்டும் என்ற
விதியை தளர்த்தி 7 ஆண்டுகளாகக் குறைத்தனர். அதே நேரத்தில் 10
ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த கைதிகள்
விடுதலை செய்யப்படவில்லை. கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில் திமுக
அரசு பாரபட்சம் காட்டியது.
எந்தவித
பாரபட்சமும் இன்றி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை
விடுதலை செய்ய தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். மேலும் தண்டனைக் கைதிகளுக்கு
முழுக்கால் சட்டை வழங்க வேண்டும் என்று ஜவாஹிருல்லாஹ் பேசினார்.
0 comments:
Post a Comment