ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்துள்ள பல்லாயிரக்கணக்கானவர்களில் பாதி பேர் குழந்தைகள். மேலும், அடுத்த சில மாதங்களில் சுமார் 7,50,000 பேர் சோமாலியாவில் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிகின்றது.
இந்நிலையில், பட்டினியால் வாடும் சோமாலியர்களுக்கு அவர்களது துன்பத்தை போக்க உதவிடும் வகையில் சஃபோலா என்ற சவூதி நிறுவனம் சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்களை அனுப்பவுள்ளது. இவற்றில் சர்க்கரை, உப்பு, எண்ணெய், அரிசி, ஓட்ஸ், மற்றும் பிற அடிப்படை ஊட்டச்சத்துக்கு தேவையான பொருட்கள் அடங்கும்.
இது குறித்து சஃபோலா நிறுவன பிரதிநிதி டாக்டர் அப்துல் ரவூஃப் மனா கூறுகையில், சவுதி அரேபியாவுக்கு உலக மக்கள் மீது, குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது பெரிய பொறுப்புள்ளது என்றும் அவர்களுக்கு உதவுவதை ஒரு புனிதமான நோக்கமாக இவ்வரசு கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், சவூதி மன்னர் அப்துல்லா பட்டினியால் வாடும் சோமாலியர்களுக்கு உதவுவதற்கான பணியை தொடங்கியதாகவும், அவற்றை தாங்கள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார். புனித ரமலான் மாதத்தின் போது 50 வெவ்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு தங்களது உயர் தர ஊட்டச்சத்து பொருட்களை அதிக அளவில் கொடுத்து உதவியதையும் டாக்டர் மனா நினைவு கூர்ந்தார்.
சோமாலியாவின் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து விகிதம் 58 சதவீதமாக உள்ளது என்றும் இது ஒரு கடுமையான ஊட்டச்சத்து ஒரு பதிவு விகிதம் என்றும் ஐ.நா.விற்கான உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு பிரிவு தலைமை தொழில்நுட்ப ஆலோசகர் க்ரன்னே மொலோனே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment