சற்றுமுன்

Friday 23 September 2011

அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரத்தில் உறுதியாக இருப்பது என்.டி.எஃப்: விக்கிலீக்ஸ் தகவல்

பல ரகசியமான தகவல்களை வெளியிட்டு வரும் அமெரிக்கரால் நடத்தப்பட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம் தற்போது பாப்புலர் ஃப்ரண்டின் நிலைப்பாட்டை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் கேரளத்தில் செயல்பட்டுவரும் என்.டி.எஃப் (பின்னர் இது பாப்புலர் ஃப்ரண்ட் ஆனது) என்ற அமைப்புதான் இந்தியாவில் அமெரிக்காவிற்கு எதிரான போராட்டங்களில் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் கண்டு நடுங்கும் ஒரே இணையதளம் “விக்கிலீக்ஸ்” என்று சொல்லலாம். காரணம் அந்த அளவிற்கு பரம ரகசியமாக செயல்பட்ட, ரகசியமாக பாதுகாக்கப்பட்ட பல தகவல்களை ஆதாரத்துடன் வெளியிட்டு பலரது புருவங்களையும் உயர்த்த வைத்திருக்கின்றது.

சமீபத்தில் மிகவும் பரப்பரப்பையும் அதே சமயத்தில் உண்மை நிலையையும் வெளிக்கொண்டு வரும் முகமாக தற்போது இந்தியா முழுவதும் பரவி திடமான அஸ்திவாரத்துடன் செயல்பட்டு வரும் தேசிய இயக்கமான  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வை பற்றிய செய்தியினை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து வாஷிங்டனுக்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில் கடந்த காலங்களில் தென் இந்தியாவில் நேஷன் டெவலப்மெண்ட் ஃப்ரண்ட் (N.D.F) என்ற அமைப்பு அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக செய்தி அனுப்பியுள்ளது.
என்.டி.எஃப் -ன் அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரத்தினாலும் அவர்கள் செய்யும் போராட்டங்களினாலும் காவல்துறையின் உதவியைக் கொண்டே நிகழ்ச்சிகளை நடத்த முடிகிறது என்று செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பேராசிரியர் கோயா
இந்த செய்தியினை பற்றி கருத்து தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினரும், தேஜஸ் மலையாள நாளிதழின் ஆசிரியருமான பேராசிரியர் கோயா அவர்கள் கூறும்போது “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மட்டுமே அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்படுவதாகவும், அதே சமயத்தில் உறுதியுடன் செயல்படுவதால தான் அமெரிக்க உளவு நிறுவனங்களால் பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கம் அதிகமாக கண்காணிக்கப்படுவதாக” கூறினார்.

அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையை கடுமையாக எதிர்ப்போம். இனி வரும காலங்களிலும் இது தொடரும் என்றார். மேலும் அவர் கூறியதாவது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் எந்த தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டதில்லை, எந்த ஒரு தீவிரவாத தாக்குதலையும் நிகழ்த்தியதில்லை, எந்த ஒரு இடத்திலும் குண்டுவைத்து அப்பாவி மக்களை கொன்றதில்லை அத்தகைய செயல்களை ஒருபோதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆதரிக்காது என்று தெரிவித்தார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் கோழிக்கோட்டில் அமெரிக்க பிரதிநிதிகளால் “இஸ்லாம் மற்றும் பெண்ணியம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். இதில் வழக்கம் போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை அங்கே பேசினார்கள். இதனை வன்மையாக கண்டித்து என்.டி.எஃப் போராடத்தை நடத்தியது, இந்த செய்தியையும் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சி நடைபெற்ற ஹோட்டல் அருகே என்.டி.எஃப் போராட்டத்தை நடத்தியது. அதில் பேராசிரியர் கோயா அவர்கள் உரையாற்றினார்கள். அதில் நூற்றக்கணக்கான் உறுப்பினர்கள் கூடி அமெரிக்காவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

விக்கிலீக்ஸ் இணையதளம் மேலும் கூறியதாவது தற்போது கேரளாவில் மிக வேகமாக என்.டி.எஃப் வளர்ந்து வருகிறது என்றும் மாநிலத்தில் என்.டி.எஃப் மற்றும் தேஜஸ் பத்திரிக்கையுமே அமெரிக்காவிற்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், மேலும் அநியாயமாக ஆஃப்கானிஸ்தான் மீது ஈராக் மீதும் போர் தொடுத்து லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த அமெரிக்கா பற்றியான உண்மையான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக என்.டி.எஃப் செயல்பட்டு வருவதாக அந்த இணையதளம் கூறுகிறது.



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More