நாசா
அனுப்பியிருந்த செயலிழிந்த செயற்கைகோள் ஒன்று பூமியை நோக்கி வந்து
கொண்டிருப்பதால் அது எங்கு விழும் என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள்
தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ரஷ்யா விண்வெளி நிபுணர்கள் இந்திய பெருங்கடலில் விழலாம் என கருத்து தெரிவித்துள்ளது.
இது
குறித்து ரஷ்ய விண்வெளி நிபுணர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 1991ம்
ஆண்டு வளிமண்டல ஆராயச்சிக்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, யு.
ஏ.ஆர்.எஸ் எனும் 6 ஆயிரம் டன் எடை கொண்ட செயற்கை செயற்கைக்கோள் கடந்த
2005ம் ஆண்டே பூமியை நோக்கி விழத்தொடங்கிவிட்டது.
இந்த
செயற்கைக்கோள் இந்திய பெருங்கடல் பகுதியில் விழ வாய்ப்புள்ளது. ரஷ்ய
விண்வெளி மையத்தின் செய்தி தொடர்பாளர் அலெக்ஸி ஜூலோடுஹின் தனது இணையதள
பிளாக்கில் கூறியதாவது: யு.ஏ.ஆர்.எஸ் செயற்கை கோள் இந்திய பெருங்கடலின்
குரோசட் தீவு பகுதிகளில் விழலாம் என எச்சரித்துள்ளனர்.
இந்த தீவுகள் தென் இந்தியாவின் 1,340 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 40 சிறு தீவுகளை கொண்ட பகுதியாகும்.
இது
மடாகஸ்கர் நாட்டின் அருகேயும், தென் ஆப்ரிக்கா கட்டுப்பாட்டில் உள்ள
பிரின்ஸ் எட்வர்ட் தீவுகள் அருகே உள்ளது. இப்பகுதியில் விழுந்தால் சுமார்
800 கி.மீ தொலைவிற்கு இதன் சிதறிய பாகங்கள் பரவி இருக்கும் என்றார்.
0 comments:
Post a Comment