நெதர்லாந்தின் பாராளுமன்றம் முஸ்லிம் பெண்கள் அணியப்படும் உடல் முழுதும் மறைக்கப்பட்ட பர்தா ஆடைகளைக் குற்றமாக கருதுகிறது.
இது பெண்களின் உரிமையைத்தான் தாக்குகின்றது எனக் கூறுகின்றனர். உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் பெண்களால் இந்த முழுமையான உடலை மறைக்கும் உடை அணியப்படுகின்றது.
முஸ்லிம் பெண்கள் இந்த பாரம்பரிய உடைகளைத் தெரிவுசெய்வதானது அல்லது அணியும்படி கட்டாயப்படுத்துவதானது குழப்பமான செய்தி ஒன்றையே வெளிக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இதுபற்றித் தீர்மானிக்க ஒரு அரசாங்கத்திற்கு யார் அனுமதி கொடுத்தது என முஸ்லிம் அமைப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
இதுபற்றித் தர்க்கம் செய்ய உரிமை இருக்கலாம். ஆனால் இதுபற்றிச் சட்டம் உருவாக்குவது என்பது என்ன விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இருப்பினும் இதற்குத் தடைவிதிப்பதன்பது சற்றுச் சிரமமானதுதான். ஆனால் பொது இடங்களில் பர்தா அணிந்துசெல்லும் பெண்களுக்கு நெதர்லாந்து அரசு 380 யூரோ தண்டம் விதித்துள்ளது.
பிரான்சையும் பெல்ஜியத்தையும் போலவே நெதர்லாந்தும் பெண்கள் தமக்கு விருப்பமானவற்றை அணியத் தடைசெய்கின்றது என்பதைத் தான் இது கூறுகின்றது.
பிரான்சிலும் பெல்ஜியத்திலும் விதிக்கப்பட்டதுபோல முகத்தை மட்டும் மூடும் திரையையும் நெதர்லாந்து அரசாங்கம் உள்ளடக்கவில்லை.
அதற்குப் பதிலாக அது ஆகக்கூடியளவு 100 பேரே அணியும் இந்த பர்தாவிற்கே தடைவிதித்துள்ளது. இந்த 100 பெண்களால் அந்நாட்டு அரசிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது என்பது சர்வ நிச்சயம் இதனை இந்த அரசுகளும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
0 comments:
Post a Comment