முத்துப்பேட்டை டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் இன்று மன்னார்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சித்தமல்லியை சேர்ந்தவர் டாக்டர் விஜயகுமார் வீட்டில் கடந்த 8ம் தேதி வீட்டின் கதவை உடைத்து 220 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன்(எடையூர்), கார்த்திகேயன்(பெருகவாழ்ந்தான்) ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இதில் தொடர்புடைய கொள்ளையர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த சுப்பிரமணி மகன் பாண்டி என்ற ராஜேந்திரன்(33), அதே ஊரைச் சேர்ந்த சிங்காரம் மகன் சங்கர் என்ற சீனு(23) ஆகியோரை சென்னை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து ஒன்னேகால் கிலோ£ தங்கம், 2கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் திருட்டு தொடர்பாக விசாரணை நடத்த பெருகவாழ்ந்தான் போலீசார் 2பேரையும் புழல் சிறையிலிருந்து எடுத்து, இன்று காலை மன்னார்குடி கோட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து பெருகவாழ்ந்தான் போலீசார், கொள்ளையர்களுக்கு வேறு கொள்ளையிலும் தொடர்பு உள்ளதா என 2பேரிடமும் தீவிர விசாரணை நடத்தவுள்ளனர்.
கொள்ளையர்கள் 2பேரில் ஒருவர் கடந்த 7ம் தேதி சிறையிலிருந்து வெளியில் வந்ததும், வந்த மறுநாளே கைவரிசைய காட்டியதும் குறிப்பிடத்தக்கது.
SOURCE:MUTHUPET
0 comments:
Post a Comment