சற்றுமுன்

Saturday, 23 July 2011

முல்லா உமர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானதின் பின்னணியில் அமெரிக்கா – தாலிபான்

 தாலிபான் தலைவர் முல்லா உமர் கொல்லப்பட்டதாக பொய்யான செய்தி வெளியானதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக அவ்வமைப்பின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
 
mullah omerதங்களின் மொபைல் போன்களை ஹேக் செய்து அமெரிக்கர்கள் எஸ்.எம்.எஸ்ஸை அனுப்பியதாக தாலிபானின் செய்தித் தொடர்பாளர்களான ஸபீஹுல்லா முஜாஹிதும், காரி யூசுஃப் அஹ்மதியும் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் முல்லா உமர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல் உள்பட ஒரு பிரிவு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன. பாகிஸ்தானும், அமெரிக்காவும் அன்றைய தினமே இச்செய்தியை மறுத்தன. ஸபீயுல்லாஹ் முஜாஹித் என்பவரின் தொலைபேசியிலிருந்து முல்லா உமர் கொல்லப்பட்டதாக எஸ்.எம்.எஸ் செய்தி வந்ததாக எ.எஃப்.பி தெரிவித்தது.

ஆப்கானிஸ்தான் மக்களை ஏமாற்ற அமெரிக்கா இதனை பரப்பியது எனவும், முல்லா உமர் உயிரோடு இருப்பதாகவும் காரி யூசுஃப் அஹ்மதி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More