சற்றுமுன்

Saturday, 23 July 2011

‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!

ந்தியாவைப் பொருத்தவரைக்கும் இப்போ மொபைல் உலகில் பாப்புலராகி வர்ற ஒரு விஷயம் 3G சேவை தான். அதனாலோ என்னவோ நோக்கியா,சாம்சங் உட்பட பல வெளிநாட்டு நிறுவனங்களும் ஸ்பைஸ்,மைக்ரோமேக்ஸ் போன்ற இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் மிகக் குறைந்த விலையில 3G மொபைல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஆனா இதுல நாம கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கு.அது என்னன்னா? ‘3G’ங்குற பேர்ல விற்கப்படுற எல்லா மொபைல்களும் ஒரு முழுமையான 3G தொழில்நுட்ப வசதிகளை கொண்ட மொபைல்களாக இருப்பதில்லை.

குறிப்பாக விலை குறைவாக விற்கப்படுற 3G மொபைல்கள்ல சில வசதிகள் இல்லாமல் இருக்கும்.அதனால நாம 3G மொபைல்களை வாங்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

முதல்ல நம்மல்ல நெறைய பேர்கள் பின்பக்கத்துல மட்டுமில்லாம வீடியோ காலிங் பேச உதவுற மொபைலோட முன்பக்கத்துலேயும் கேமரா (FROND CAMERA) இருக்குற மொபைல்தான் 3G மொபைல்னு நெனைக்கிறாங்க. அது வாஸ்தவம் தான்.ஆனா அது மட்டுமே 3G இல்லை. 3G சேவைங்கிறது ஒரு மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தோட பேரு ( 3G is the third generation of mobile communications systems ) அவ்ளோ தான்.

இந்த 3G தொழில்நுட்பத்துல மூன்று வகையான இணைய வங்கம் உண்டு.அந்தந்த இணைய வேகத்தோட அளவுகளைப் பொறுத்து ஒவ்வொரு இணைய வேகத்துக்கும் ஒவ்வொரு பேர் உண்டு.

# WCDMA(Wideband Code Division Multiple Access) இதோட அதிகப்பட்ச இணைய வேகம் 2 Mbps வரைக்கும் தான். ஆனாலும் நோக்கியா உட்பட பெரும்பாலான மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் அதிகபட்ச வேகம் 384 kbps என்ற வேக அளவில் தான் கொடுக்கிறார்கள்.

# HSDPA(High-Speed Downlink Packet Access)இதோட அதிகபட்ச இணைய வேகம் 14.4 Mbps. இந்த HSDPA வுல பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகள் இருக்கு.ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வேகம்.

கீழே உள்ள படங்களைப் பாருங்க உங்களுக்கு புரியும்.

nokia 5230 wcdma and hsdpa speed
.............................................................
nokia e6 hsdpa speed
......................................

இதுல நமக்கு மொபைல் தயரிச்சி விற்பனை செய்ற நிறுவனங்கள்  மொபைலோட விலைக்கு ஏத்த மாதிரி ஒரு பிரிவின் வேகத்தை தேர்ந்தெடுத்து நம்ம மொபைல்ல குடுப்பாங்க.

நோக்கியா 5230 மாடல்ல WCDMA வில் இணைய இணைப்பின் வேகம் மற்றும் HSDPA வில் CATEGARY 6 ல் அதிகபட்ச வேகம் 3.6 Mbps  என்ற அளவில் இருப்பதைப் பாருங்கள்.

அதேபோல நோக்கியா E6 மாடலில் HSDPA வில் இணைய இணைப்பின் வேகம் Cat9 இல் அதிகபட்ச வேகம் 10.2 Mbps அதன் இணையவேகத்தின் மாறுபட்ட அளவுகளைப் பாருங்கள்.

நோக்கியாவில் இந்த இரண்டு மாடல்களும் முறையே 7855/- மற்றும் 18679/- என்ற குறியீட்டு விலைகளில் விற்கப்படுகின்றன.இந்த இரண்டு மொபைல்களும் 3G மொபைல்கள் தான்.ஆனால் அதன் விலைகளுக்கு ஏற்ப 3G வசதிகளும் மாறுபடுவதை நீங்கள் காணலாம்.

குறைவான விலையில் 3G மொபைல்களை தயாரித்து விற்பனை செய்யும் LEMON,SPICE,BEETEL,MICROMAX போன்ற இந்திய நிறுவனங்கள் 3G மாடல்களில் WCDMA தொழிநுட்பத்தில் அதிகபட்சம் 384 kbps என்ற வேக அளவையும் HSDPA தொழில்நுட்பத்தில் அதிகபட்சம் 3.5 என்ற வேகஅளவையும் தான் நமக்கு வழங்குகின்றன.மேலும் இந்திய நிறுவனங்கள் 3G என்ற பெயரில் விற்கும் மொபைல்களில் WCDMA தொழிநுட்பத்தை மட்டுமே புகுத்தி குறைந்த விலையில் நம்மிடம் விற்கின்றனர்.

ஆகவே நீங்கள் ஒவ்வொரு முறை 3G மொபைல் வாங்கும் போதும். கண்டிப்பாக அதன் நெட்வொர்க் மற்றும் இணைய இணைப்பின் வேகத்தின் அளவு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு வாங்கவும். அப்போது தான் மொபைலில் நாம் தடையில்லா இணைய இணைப்பை பெற முடியும்.

அதேபோல என்னிடம் நெறைய பேர் 'இந்த மொபைல்ல முன்னாடி கேமரா இல்லை,அதனால இது 3g மொபைல் இல்லை' என்று சொல்வார்கள். வீடியோ காலிங் செய்யக்கூடிய வகையில் இருக்கும் முன்பக்க கேமரா 3G சேவையில் ஒரு மேம்படுத்தப்பட்ட வசதிதானே தவிர அது இருந்தால் மட்டுமே ஒரு மொபைல் 3G மொபைல் ஆகி விடாது

எத்தனையோ சீன நிறுவனங்கள் டபுள் கேமரா உள்ள மொபைல்களை சந்தையில் விற்கின்றன. உடனே அவை எல்லாம் 3G மொபைல் ஆகிவிடுமா என்ன?இந்தியாவில் 3500/- ரூபாய் விலையிலிருந்து 3G மொபைல்கள் கிடைக்கின்றன. ஆகவே உங்கள் மொபைலை 3G க்கு அப்கிரேடு செய்யும் போது எல்லா வசதிகளும் உள்ள மொபைலாக இருக்கிறதா என்பதை கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More