முத்துப்பேட்டை சுற்றுலா தளமாக கருதப்படும் அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இங்கு அதிகமாக மலைத் தேனீக்கள் படையெடுப்பு அதிகமாகி உள்ளது இதனால் வனத்துறையினர் லகூனிற்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
தற்போது தேன் சேகரிக்கும் காலம் என்பதால் அலையாத்திக்காடுகள் முழுவதும் தேனீக்கள் ரீங்காரித்தது வளம் வருகிறது. தேனீக்கள் பூக்களில் உள்ள தேனை போலவே நல்ல குடிநீரும் பிடித்தமானதாகும். காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் தண்ணீரை கண்டுபிடிக்கும் தேனீக்கள் அதை பருக அதிகளவில் குவிகின்றன.
இதனை விரட்ட முற்படும் போது தற்காப்புக்காக கொட்டிவிடுகின்றன இதனால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் வரும் ஜூலை முதல் மாதம் வரை அங்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்திற்கு பிறகு வனத்துறை அனுமதியுடன் சுற்றுலா பயணிகள் லகூனிற்கு செல்லலாம் என வனத்துறை ரேஞ்சர் மாணிக்கம் கூறினார்.
0 comments:
Post a Comment