சற்றுமுன்

Tuesday 26 July 2011

ஹர்ட் டிஸ்க்கை தனித்தனி பகுதிகளாக பிரித்தெடுப்பதற்கு

கணணியில் Operating System நிறுவும் போதே தனித்தனி பகுதிகளாக ஹர்ட் டிஸ்க்கை பிரித்திருப்போம். ஒரு சிலர் Operating System நிறுவும் போது முறையாக ஹர்ட் டிஸ்க்கை பிரிக்காமல் விட்டுவிடுவார்கள்.

அதாவது C: மட்டுமே பிரித்து வைத்திருப்பர், அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனினும் கோப்புகளை முறையாக கையாள முடியாது.
எனவே ஹர்ட் டிஸ்க்கை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருப்பதே சிறந்தது. ஹர்ட் டிஸ்க்கை தனித்தனி பகுதிகளாக பிரிக்க நம்முடைய ஆபரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது. 

ஆனால் அதில் ஒரு சில வசதிகள் குறைவாக உள்ளது. ஹர்ட் டிஸ்க்கை முறையாக பிரிக்கவும், பிரித்த ஹர்ட் டிஸ்க்கில் மாற்றங்கள் செய்யவும், இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. அதில் ஒன்றுதான் இந்த Aomei Dynamic Disk Manager. 

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் பதிந்து கொள்ளவும். பின் வேண்டியபடி ஹர்ட் டிஸ்க்கை முறைப்படுத்தி கொள்ளவும். இந்த மென்பொருள் பீட்டா பதிப்பாகும்.

மேலும் இந்த மென்பொருள் மூலம் ஏற்கனவே பிரித்த பகுதியையும் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இந்த பீட்டா வெர்சன் ஜீலை 31 வரை மட்டுமே. முழுபதிப்பும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More