சற்றுமுன்

Thursday 28 July 2011

பேஸ்புக்கில் விளம்பரங்களை தடை செய்வதற்கு

சமூக இணையதளமான Facebook-ல் வலது பக்கம் தெரியும் விளம்பரங்கள் பல நேரங்களில் நமக்கு சலிப்பை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினையை நீக்கி பேஸ்புக் விளம்பரங்கள் இல்லாமல் பார்ப்பதற்கு ஒரு வழி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் தனக்கென்று தனி இடத்துடன் வலம் வரும் பேஸ்புக் இணையதளத்தின் வலது பக்கம் இருக்கும் விளம்பரங்களை எளிதாக நீக்கலாம். 

நமக்கு உதவ ஒரு நீட்சி உள்ளது. குரோம் உலாவியில் குறிப்பிட்டிருக்கும் பக்கத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி குரோம் உலாவியில் எளிதாக நிறுவலாம்.

இனி நாம் பேஸ்புக் இணையதளத்தை திறந்தால் வலது பக்கம் எந்த விளம்பரமும் நமக்கு தெரிவதில்லை. பேஸ்புக்கில் சில சமயங்களில் தேவையில்லாத விளம்பரங்கள் வந்து நம் கவனத்தை திருப்பும்.

ஆனால் இனி எந்த விளம்பர தொந்தரவும் இல்லாமல் பேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்தலாம். முழுமையாக விளம்பரங்களை தடை செய்தால் பல நேரங்களில் சில இணையப்பக்கங்கள் தெரிவதில்லை. ஆனால் இப்போது நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் விளம்பரம் தடுப்பு பேஸ்புக் இணையதளத்திற்கு மட்டுமே பொருந்தும்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More