சற்றுமுன்

Tuesday 26 July 2011

யெமனில் குண்டுவெடிப்பு:மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட எட்டுபேர் பலி

அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டம் வலுப்பெற்று வரும் யெமன் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பில் மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட எட்டுபேர் மரணமடைந்தனர்.

இரண்டு அதிகாரிகள், மேஜர், லெஃப்டினண்ட் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். யெமனின் கடலோர பிரதேசமான ஏடனில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அல்காயிதா இயக்கம் இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அப்யான் மாகாணத்திலிருந்து ராணுவம் வாபஸ் பெற இருக்கவே இத்தாக்குதல் நடந்துள்ளது.

அல்காயிதா ஆதரவுப்பெற்ற போராளிகளுக்கு எதிரான போருக்கு கூடுதல் ராணுவத்தினரை அனுப்பியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரபு நாடுகளில் அல்காயிதாவின் செல்வாக்கு பெற்ற பகுதியாக யெமன் கருதப்படுகிறது.

யெமன் நாட்டில் மக்கள் எழுச்சி கிளர்ந்தெழுந்துள்ள வேளையில் தெற்கு யெமனில் போராளிகள் சவாலாக விளங்குகின்றனர். மற்றொரு சம்பவத்தில் தெற்கு யெமனின் தெய்ஸில் நடந்த மோர்ட்டார் தாக்குதலில் 25 வயதான பெண்ணும், 10 வயதான குழந்தையும் கொல்லப்பட்டனர். இதற்கிடையே தாக்குதலில் காயமுற்று சவூதியில் சிகிட்சைப்பெற்று வரும் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் நாட்டிற்கு திரும்புவதை தடுப்பதற்கான முயற்சியை எதிர்கட்சியினர் துவக்கியுள்ளனர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More