சற்றுமுன்

Wednesday, 17 August 2011

பேஸ்புக்கின் மூலம் துபாயில் வேலை கிடைத்த இஸ்லாமிய வாலிபர்

சென்னையில் வேலை தேடி போன நேரத்தில் ரூம் மெட் ஆக அறிமுகமானவர் தான் இந்த நண்பர். இவர் பெயர் ஸ்டாலின் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர் இவர் மல்டிமீடியா துறையில் திறமையானவர்.  

இவருடைய கனவு எல்லாம் துபாய் சென்று சம்பாரிக்க வேண்டும் என்ற ஆசை தான். ஆனால் வருக்கு உதவ சரியான நபர் கிடைக்கவில்லை இவருடைய பழக்க வழக்கம் எல்லாம் முத்துப்பேட்டை சகோதரர்களான முஸ்லிம்களிடம் மட்டுமே . 

இஸ்லாமிய சகோதரர்களை தான்  அதிகம் விரும்புவார் இந்த பழக்க வழக்கத்தினால் எங்களுடைய நடவடிக்கைகள் பேச்சுக்களை கண்காணிப்பார். அவரிடத்தில் இஸ்லாத்தை பற்றி அதிகமாக விவாதிப்போம் இஸ்லாத்தை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்த அவர் ஒரு நாள் நான் இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறேன் என்றார். பின்பு அவர் தந்தையுடைய சம்மதத்துடன் இஸ்லாத்தை ஏற்றார் மாஷா அல்லாஹ்.

இஸ்லாத்தை ஏற்ற அவர் தன்னுடைய பெயரை மாலிக்
(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என மாற்றிகொண்டார். மாலிக் எங்களை விட அதிகமாக இபாத்தத்துகளில் ஈடு படுவார். அவரிடம் துபாய் பற்றி கூறும்போதெல்லாம் அவர் இன்ஷா அல்லாஹ் நா கண்டிப்பா அங்க போவேன் என்று சொல்லுவார். 

இந்த வேலையில் சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்த அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிநாடு செல்வதற்காக பிரிய ஆரம்பித்தோம். இந்நிலையில் அவரும் இன்னொரு முத்துப்பேட்டை நண்பரும் மட்டுமே  இருந்தனர். 

இவ்வேளையில் பல வருடங்களாக அவர் காலேஜில் படித்த நண்பர் இவரை தேடிக்கொண்டிருந்திருக்கிறார். அவர் துபாயில் மேனேஜராக பனி புரிந்து கொண்டிருப்பவர் இவர் மூலம் பல நண்பர்களுக்கு வேலை வாங்கி கொடுத்திருந்திருக்கிறார். ஆனால் மாலிக்கை மட்டும் கண்டு பிடிக்க முடியவில்லை. மாலிக்குடைய இ மெயில், போன் நம்பரோ எதுவுமே இல்லாத சூழ்நிலையில் கடைசியில் எதார்த்தமாக பேஸ் புக்கில் உலாவி கொண்டிருக்கையில் தான் இவருடைய போட்டோவை பார்த்திருக்கிறார் பின்பு  பேஸ்புக்கில் உள்ள நம்பரை  எடுத்து அவருக்கு போன் போட்டு பேசிருக்கிறார். 

கடைசியில் அவருக்கு போன் இண்டர்வியு மூலம் செலக்ட்  ஆகி 15 நாளில் அவருக்கு விசா வந்து விட்டது அல்ஹம்துலில்லாஹ். இப்பொழுது அவர் அவருடைய இலட்சியத்தை அடைந்து விட்டார். 

இன்ஷா அல்லாஹ் இவருடைய இஸ்லாமிய வாழ்க்கை சிறப்பாக அமைய ஏக இறைவனிடம் பிராத்தியுங்கள்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More