சற்றுமுன்

Wednesday 24 August 2011

ரேஷன் கடத்தல்,பதுக்கல் பற்றி தகவல் கொடுத்தால் சன்மானம்!

தமிழகத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் ரேஷன் பொருட்கள் கடத்தல் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அமைச்சர் புத்தி சந்திரன் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து நேற்று பேரவையில் நடைபெற்ற உணவுத்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் பதிலளித்து பேசிய உணவுப்பொருள் வழங்கு துறை அமைச்சர் புத்திசந்திரன் அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதத்துக்குள் 181 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 41 ஆயிரத்து 442 புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது  4,286 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2321 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 217 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 90 பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்து 469 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 45 ஆயிரத்து 45 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் எதிர் வரும் 2011&12ம் ஆண்டில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல், கடத்தல் ஆகியவை தொடர்பாக தகவல் தருபவருக்கு வழங்கப்படும் சன்மானம் 500 ரூபாயாக உயர்த்தப்படும். போலி குடும்ப அட்டை குறித்து தகவல் தருபவர்களுக்கு 200 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக சன்மானம் வழங்கப்படும் என்றவர் மேலும் சைதாப்பேட்டை மண்டல உதவி ஆணையர் அலுவலகத்துக்கு 53 லட்ச ரூபாயில் சொந்த கட்டிடம் கட்டப்படும். வில்லிவாக்கம், சைதாப்பேட்டை,  தர்மபுரி, அரியலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகங்களுக்கு ஐந்து வாகன்ங்கள் வழங்கப்படும். 

தண்டையார்பேட்டை வட்டத்தில் தங்கசாலையில் 60 லட்ச ரூபாய் செலவில் 1250 டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு அமைக்கப்படும் திருக்கழுக்குன்றத்தில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு ரூ.50 லட்சத்தில் அமைக்கப்படும். 50 கோடி செலவில், 65 கிடங்குகள் கூடுதலாக கட்டப்படும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ.1.7 கோடி செலவில், 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும். என்று அமைச்சர் புத்தி சந்திரன் கூறினார்.



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More