சற்றுமுன்

Saturday 20 August 2011

முத்துப்பேட்டை அருகே ரவுண்டானா அமைக்க வேண்டும்

முத்துப்பேட்டை அருகே சாலை விபத்தினை தடுக்க  ரவுண்டானா அமைக்க வேண்டும் என  பொது மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
முத்துப்பேட்டை நகரின் குறுகிய சாலை பயணத்தால் ஏற்ப்படும் பாதிப்பை தவிர்க்க பைபாஸ் சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி பட்டுக்கோட்டை ரோடு செம்படவன் காடு துவங்கி திருத்துரைப்பூண்டி ரோடு ஆலங்காடு வரையிலும் கோவிலூர் வழியாக பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு பயனில் உள்ளது. 

இந்நிலையில் கோவிலூர் மற்றும் ஆலங்காடு சாலை இணைப்பு முகப்பு பகுதியில்
ரவுண்டானா இல்லாததால் வாகன விபத்து அதிகரித்து பலர் உயிரிழந்து வருகின்றனர். இதையொட்டி கோவிலூர் நால்ரோடு பகுதியில் ரூ80  லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் முழுமை பெறாத நிலையில், அமைக்கப்படும் தடுப்புகள் திடமின்றி இருக்கின்றன. இரு சக்கர வாகனம் மோதினால் கூட பெயர்ந்துவிடும் அளவுக்கு தடுப்புகள் அமைந்துள்ளன. தடுப்புகளை அகற்றி விட்டு கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்பட வேண்டும்.

மேலும்
முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை சாலை இணைப்பு பகுதி மற்றும் ஆலங்காடு பகுதியில் ரவுண்டானா அவசியம். இப்பகுதியில் இது நாள் வரையிலும் உயிரிழப்புகளும், வாகன விபத்துகளும் அதிகம் ஏற்ப்பட்டுள்ளது. கோவிலூர் போன்று ஆலங்காடு சாலை இணைப்பு மற்றும் முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை சாலை இணைப்பு பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டால் தான் தொடர் விபத்துகளும், உயிரிழப்புக்களையும் தவிர்க்க முடியும்.

எனவே விபத்தை தடுக்க
முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை சாலை இணைப்பு பகுதி மற்றும் ஆலங்காடு சாலை இணைப்பு பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர். 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More