ரமளான் நோன்பு கஞ்சி வைக்க அரசு அரிசி வழங்காததைக் கண்டித்து திருவாரூரில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு போராட்டம் நடத்தியது. முஸ்லிம்களின் புனித மாதமான ரமளானின், நோன்பு கஞ்சிக்குத் தமிழக அரசால் ஒவ்வொரு வருடமும் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் இவ்வருடமும் அரசு அரிசி வழங்கியதில், சில பகுதிகளுக்குச் சரிவர அரிசி வழங்கவில்லை என பரவலான குற்றச்சாட்டு எழுந்தது. அதன் வகையில் திருவாரூரில் சரிவர அரிசி வழங்கவில்லை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று(வியாழன்) போராட்டம் நடைபெற்றது.
இதில் திருவாரூருக்கு அரிசி வழங்குவதில் அரசு காட்டும் மெத்தனபோக்கைக் கண்டித்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தன் எதிர்ப்பைக் காட்டினர். இப்போராட்டத்தில் மாவட்டம் முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment