முத்துப்பேட்டை அருகே தில்லை விளாகம் நடு நிலைப்பள்ளியில் 130 மாணவர்கள் படித்து வருகின்றனர் அதில் 80 மாணவர்கள் தினமும் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.
நேற்று மதியம் வழக்கம் போல் அனைவருக்கும் சத்துணவு பரிமாறப்பட்டது. மாணவர்கள் சாப்பிட்டு விட்டு வகுப்புகளுக்கு திரும்பினர். இந்நிலையில் பிற்பகல் 3 மணியளவில் மாணவர்கள் சிலர் திடீரென வாந்தி எடுத்தனர். ஒரு சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர் இதனால் பள்ளியில் பதட்டம் ஏற்ப்பட்டது.
உடனே பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுடன் முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அனைவருக்கும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
இது குறித்து பள்ளி ஆசிரியர் கூறுகையில், 3 மணியளவில் மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்து மயக்கமாயினர். உடனே தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் கொடுத்தோம். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவர்களை வேன் மற்றும் கார்களில் அரசு ஆசப்த்திரிக்கு அழைத்து வந்தோம். மயக்கத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
0 comments:
Post a Comment