நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரேவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் வேலையில், முத்துப்பேட்டையில் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆர்வலர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
முன்னதாக முத்துப்பேட்டை ஒன்றிய அலுவலக வாயிலில் உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் இருக்க தீர்மானித்தனர். ஆனால் போலீசார் பழைய பஸ் ஸ்டான்ட் பேரூராட்சி அலுவலகம் எதிரே உண்ணா விரதம் நடத்த அனுமதி அளித்தனர்.
வேத மூர்த்தி தலைமை வகித்தார் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பலர் இந்த உண்ணாவிரத போராத்தில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment