சற்றுமுன்

Saturday 27 August 2011

கலெக்டர் பேச்சு: முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலப்பாதை

முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் என்றாலே ஒரு விதமான கலக்கம் தான். அடிதடிகள், பஸ் உடைப்பு, கடை எரிப்பு, போலீஸ் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்வது தான் நமக்கு ஞாபகம் வரும்.

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை கரைப்பு தொடர்பாகவும், ஊர்வலம் அமைதியாக நடத்தப்படுவதர்க்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ச. முனியசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   
 
சிலைகளை ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். சிலை கரைப்பு ஊர்வலம்  ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டும் செல்ல வேண்டும். முத்துப்பேட்டையில் அடுத்த மாதம் செப்டம்பர் 10ம் தேதி ஊர்வலம் நடத்தப்பட உள்ளதாக இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஊர்வலம் மதியம் 3 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணிக்குள் நடத்தி முடித்திட வேண்டும். சிலைகளை ஜாம்புவானோடை தர்கா, ஆசாத் நகர் சந்திப்பு, பழைய பஸ் நிலைய சந்திப்பு, கொய்யா சந்திப்பு, ஏ எம் பங்களா, செம்படவன் காடு ரயில்வே கேட் வழியாகச் சென்று செம்படவன் காடு பாமணி ஆறு கீழ் கரையில் கரைத்திட வேண்டும்.

சிலை கரைத்து முடித்ததும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் காவல் துறையினரால் ஏற்ப்பாடு செய்யப்படும் வாகனங்களில் ஏறி கிழக்கு கடற்க்கரை சாலை பைபாஸ் வழியாகச் செல்ல வேண்டும். எனவே இந்து அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று
கலெக்டர் ச. முனியசாமி அறிவுறுத்தினார்.    

கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக எந்த வித பிரச்சனைகள் இல்லாமல் இருந்த முத்துப்பேட்டை நகரம் இனிமேலும் எந்த வித பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்..! 



 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More