சற்றுமுன்

Wednesday, 3 August 2011

தண்ணீரில் நடக்கும் ரோபோ: சீன விஞ்ஞானிகள் சாதனை (வீடியோ இணைப்பு)

தண்ணீரில் நடக்க வேண்டும் என்பது மனிதனின் கனவாக உள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் சீன விஞ்ஞானிகள் தண்ணீரில் நடக்கும் அதிசய ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.

பூச்சி போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவால் தண்ணீரில் நடக்க மட்டுமின்றி ஓடவும் முடியும். தண்ணீரில் நடக்கும் ரோபோவுக்கு அசையக்கூடிய தடுப்புகள் போன்ற 2 கால்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுதவிர தண்ணீரை நீந்தி கடக்கக்கூடிய வகையில் வயர்களால் ஆன 10 கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவைகளை இயக்க கூடிய வகையில் 2 மிக சிறிய எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிகவும் எடை குறைவானது. தண்ணீரில் மூழ்கி மீண்டும் மேல் எழுந்து வரக்கூடியது. 

சீனாவை சேர்ந்த ஷிஜியாங் பல்கலைக்கழகத்தின் கெமிக்கல் என்ஜினீயரிங் பேராசிரியர் குயின்மின்பான் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். 



இதுபோன்ற ரோபோக்கள் ராணுவ உளவு பணிக்கும், தண்ணீரில் மாசுபட்டதை கண்டறியவும் மற்றும் பல செயல்பாடுகளுக்கும் பயன்படும் என விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More