நார்வேயில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 77 பேர் உயிரை பலி வாங்கிய தீவிரவாதி ஆண்டர்சின் பட்டியலில் ஹாலிவுட் பிரபலங்கள் இடம்பெற்றிருந்தது தெரியவந்துள்ளது.
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் பிரதமர் அலுவலகம் அருகில் கடந்த 22ம் தேதி குண்டுவெடித்தது. அதில் 7 பேர் உடல் சிதறி பலியாகினர்.
அடுத்த 2 மணி நேரத்தில் உடோயா தீவில் ஆளும் கட்சியின் இளைஞர் அணி கூட்டத்தின் மீது ஆண்டர்ஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 70 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பையும் ஆண்டர்ஸ் நடத்தியது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் இருக்கும் ஆண்டர்சின் 1,500 பக்க இணையதள குறிப்பு கைப்பற்றப்பட்டது. அதில் கொலை செய்யப்பட வேண்டியவர்களாக ஆண்டர்ஸ் ஒரு பட்டியல் போட்டிருந்தான்.
அதில் ஹாலிவுட் பிரபலங்களான நடிகை ஏஞ்சலினா ஜூலி, மடோனா, பாடகி லேடி காகா, நடிகை ஹெய்தி கிளம், ஸ்கார்லட் ஜான்சன், ஜினத் பால்ட்ரோ பெயர்கள் இருந்தன.
ஏஞ்சலினா, அவரது கணவர் பிராட் பிட் ஆகியோரின் 6 குழந்தைகளில் 3 குழந்தைகளை எத்தியோப்பியா, கம்போடியா, வியட்நாமில் இருந்து தத்து எடுத்தது தவறு என்று கொலை பட்டியலில் சேர்த்ததற்கு ஆண்டர்ஸ் காரணம் கூறியுள்ளார்.
அதேபோல பாடகி மடோனா தனது 4 குழந்தைகளில் 2 குழந்தைகளை மலாவியில் இருந்து தத்து எடுத்ததும், லேடி காகா அமெரிக்க குடியுரிமை விதிகளை விமர்சித்து பாடியதும் காரணமாக கூறியுள்ளார்.
இதற்கிடையே தன்னை நார்வே நாட்டு குடிமகனாக அடையாளம் தெரியாமல் இருக்க ஆண்டர்ஸ் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாகவும் ஆஸ்லோவில் நோர்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment