மட்டன் கீமா கஞ்சி என்றால் 200 கிராம் மட்டன் கீமா நன்கு தண்ணீரில் அலசி வடிகட்டி வைக்கவும்.பின்பு அதனுடன் கறிமசாலா 1 டீஸ்பூன்,இஞ்சி பூண்டு 1 டீஸ்பூன்,கரம் மசாலா அரைஸ்பூன்,உப்பு சேர்த்து வேக வைத்து வைக்கவும்.விரும்பினால் பாதி வெங்காயம்,தக்காளி சேர்க்கலாம்.
தேவையான பொருட்கள் ;
பச்சரிசி - 100 -கிராம்
பாசிபருப்பு - ஒரு கைகுத்து
கடலை பருப்பு - ஒரு கைகுத்து
வெங்காய்ம் - 1
தக்காளி -1
பச்சை மிள்காய் - 2
சீரகம்,வெந்தயம் பொடி செய்தது- தலா அரைஸ்பூன்
கரம் மசாலா,சோம்பு பொடி - தலா கால்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தேங்காய் பால் -பாதிகாயில் (தேவைக்கு)
மல்லி புதினா கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் + நெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
அரிசி பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி,பருப்பு,தண்ணீர்,சீரகவெந்தயப்பொடி,கரம் மசாலா,சோம்பு பொடி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,வெங்காய்ம்,தக்காளி,மிளகாய்,மல்லி புதினா,உப்பு சேர்த்து கொதி வரவும் வெயிட் போட்டு முதல் விசில் வரவும் அடுப்பை குறைத்து 20 நிமிடம் வைத்து இறக்கவும்.
உடன் வெந்த கஞ்சியை சூட்டோடு நன்கு மசித்து விடவும். ரெடி செய்ய தயார் செய்த அரிசி பருப்பு கஞ்சியுடன் வேகவைத்த மட்டன் கீமாவை தேவைக்கு சேர்க்கவும்.கலந்து விடவும்.
பின்பு எண்ணெய் நெய் சேர்த்து வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்த தேங்காய்ப்பால் தேவைக்கு தண்ணீர் சேர்த்து ,உப்பு சிறிது சேர்த்து நுரை கூடி வரவும் அடுப்பை அணைத்து ரெடி செய்த மட்டன் கீமா,அரிசி பருப்பு கஞ்சியுடன் சேர்க்கவும். தாளித்த தேங்காய்பால் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
சுவையான மட்டன் கீமா கஞ்சி ரெடி.
0 comments:
Post a Comment