சற்றுமுன்

Monday, 5 September 2011

விண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு

இன்னும் சில மாதங்களில் விண்டோஸ் 8 ஆபரேடிங் சிஸ்டத்தின் சோதனைப் பதிப்பு வர இருக்கிறது. இந்தத் தகவலை மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் ஸ்டீபன் சினோப்ஸ்கி புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒரு வலைமனையில் தெரிவித்துள்ளார். 

மைக்ரோசாப்ட் நிறுவன சோதனைப் பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனாளர்கள், நிறுவனங்கள், சாப்ட்வேர் புரோகிராம் தயாரிப்பவர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள மைக்ரோசாப்ட் விரும்புவதால் அந்த வலை மனையைத் தொடங்கியுள்ளதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்தினை விண்டோஸ் 8 பதிப்பு முழுவதுமான புத்துணர்ச்சியுடன் காட்டும். நிறைய புதிய விஷயங்கள் அதில் தரப்பட்டுள்ளன. இந்த பதிப்பில் மட்டுமே காணப்படும் வசதிகள் பல இதில் அடங்கியுள்ளன.

எனவே இவற்றை அறிவிப்பு செய்திட இன்னும் சில நாட்களில் விவரங்கள் அறிவிக்கப்படும் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை இயக்க விஷயங்கள் முதல் யூசர் இன்டர்பேஸ் வரையிலான பல தகவல்கள் தரப்பட இருக்கின்றன. 

இப்போதைக்கு ஒன்று மட்டும் மிகப்பலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது விண்டோஸ் 7 ஆபரேடிங் சிஸ்டத்தினை இயக்கும் கணணிகள் அனைத்தும், விண்டோஸ் 8 சிஸ்டத்தையும் இயக்க முடியும். எந்தவிதமான ஹார்ட்வேர் மேம்பாடு தேவைப்படாது. 

சென்ற மே மாதத்தில் மைக்ரோசாப்ட் ஸ்டீவ் பால்மர் வரும் 2012ல் உறுதியாக விண்டோஸ் 8 வரும் எனத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதால் இந்த புதிய வலைமனையும் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More