முத்துப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்ப்பட்ட
மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்
குறைவாகவே உள்ளது.
குடிநீர் வசதி முழுமையாக கிடையாது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ 1லட்சம் திட்ட மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்க்கொள்ளப்பட்டது. அதில் திட்ட நிதி வீனடிக்கப்பட்டதே தவிர குடிநீர் கிடைத்த பாடில்லை. இதனையடுத்து புதிதாக குடிநீர் டேங்க் மற்றும் பைப் லைன்கள் அமைக்கப்பட்டு குடிநீருக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டது. நீண்ட காலமாக கட்டுமானப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து கடந்து ஆண்டு தான் நிறைவடைந்தது.
பணிகள் முடிந்தும் குடிநீர் வந்தபாடில்லை, பள்ளி வளாகத்தில் பயனில் இருந்த மூன்று அடிபாம்புகளும் காணமலே போய்விட்டன. இதனால் குடிநீருக்கு வழியின்றி மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறி குடிநீருக்கு அலைய வேண்டியிருக்கிறது. இந்நிலையில் தனியார் வாகனம் வாயிலாக பள்ளிக்கு குடிநீர் வசதி ஏற்ப்பாடு செய்யப்பட்டது. தனியார் வாகனமும் சரியாக வருவதில்லை.
இதனால் நிரந்தர குடிநீர் வசதிக்கு வாய்ப்பில்லாத நிலைமை தொடர்கிறது. இது குறித்து மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் ஆசிரியைகள் பலர் பணியாற்றுகின்றனர், அவர்களுக்கு தனிக்கழிவறை வசதிகள் கிடையாது. மாணவர்களுக்கான பொதுக்கழிவறையும் பராமரிப்பின்றி கிடக்கின்றன. இரவில் பள்ளியை காக்க காவலர் வசதியும் இல்லை. குடிநீர் வசதி மட்டுமின்றி அடிப்படை வசதிகள் கூட கிடையாது என மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment