சற்றுமுன்

Sunday 28 August 2011

குத்ஸ் தினம்: அரபுலகில் ஃபலஸ்தீன் ஒற்றுமை ஆதரவு பேரணிகள்

குத்ஸ் தினத்தில் அரபுலகம் முழுவதும் இஸ்ரேல் எதிர்ப்பு பேரணிகள் நடத்தி ஃபலஸ்தீன் மக்களுடன் ஒற்றுமை உணர்வை மக்கள் வெளிப்படுத்தினர்.
சவூதி அரேபியாவின் பல்வேறு நகரங்களில் ஃபலஸ்தீன் ஆதரவு பேரணிகள் நடந்தேறின. அவாமியா நகரத்தில் இஸ்ரேல் கொடி எரிக்கப்பட்டது. இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்கள் முழங்கப்பட்டன.

ஈரானின் முக்கிய நகரங்களிலும் ஃபலஸ்தீன் ஆதரவு பேரணிகள் நடைபெற்றன. டெஹ்ரானில் நடந்த பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியதாவது: “மனித சமூகத்திற்கு அவமானம் இஸ்ரேல் ஆகும்.பொய் மற்றும் மோசடி மூலம் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது. உலகிலுள்ள காலனியாதிக்க-மனித விரோத சக்திகளின் அடித்தளமே இஸ்ரேல்தான். மேற்காசியாவில் நிரந்தரமாக பீதியையும், ஸ்திரத்தன்மை இல்லாமையையும் உருவாக்கி காலனியாதிக்க சக்திகளை குடியேறச் செய்கிறது யூத நாடு” என நஜாத் கூறினார்.

ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தலைவரான ஆயத்துல்லாஹ் கொமைனி அவர்களால் 1979-ஆம் ஆண்டு ரமலானின் கடைசி வெள்ளிக்கிழமை குத்ஸ் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இஸ்ரேலுக்கு எதிராக போராடும் ஃபலஸ்தீன் மக்களுக்கு ஒற்றுமை உணர்வை பிரகடனப்படுத்தும் விதமாக குத்ஸ் தினத்தை கடைப்பிடிக்க கொமைனி அழைப்புவிடுத்தார்.





0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More