சற்றுமுன்

இறைத்தூதரை அவமதித்த ரஹ்மத் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இறைத்தூதரை கார்டூன் வரைந்து அவமதித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது..

மோடிக்குச் சிக்கல்: சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் !

குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது..

வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் வழக்கு தொடரும் வசதி!

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் வசிக்கும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்தியா வராமலேயே உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது..

அதிவேக இணைய தொடர்பு வழங்கும் நகரங்களின் பட்டியல்: தென்கொரியா முதலிடம்

இணைய சேவை வழங்கும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள் எவ்வளவு வேகத்தில் இணைய இணைப்பிணையும் தொடர்பினையும் வழங்குகிறார்கள் என பண்டோ நெட்வொர்க்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்தது..

Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

Monday, 10 October 2011

இறைத்தூதரை அவமதித்த ரஹ்மத் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இறைத்தூதரை கார்டூன் வரைந்து அவமதித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

உலக முஸ்லிம்கள் அனைவருடைய உயிரினும் மேலாக மதிக்கும் இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்களது கார்டூன் எனும் கேலிசித்திரம் வரைந்து அதை 2010-2011 ஆம் ஆண்டு கல்வி மலரில் வெளியிட்டுள்ள முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிகுலேசன் ஸ்கூலுக்கு எதிராக மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 







இந்த முற்றுகை போராட்டத்திற்கு தலைமை வகுத்தவர் பா. அப்துல் ரஹ்மான் (மாவட்ட தலைவர்). கண்டன உரையை மாநில மேலாண்மை குழு உறுப்பினர் பக்கிர் முகமது அல்தாபி அவர்கள் உரையாற்றினார் நன்றி உரையை அன்சாரி அவர்கள் உரையாற்றினார்.பள்ளி நிர்வாகத்திற்கெதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பாகுபாடின்றி அனைவரும் ஆயிரத்திற்கும் மேலான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.  

இது போன்று சமுதாய பிரச்சனைகளுக்கு பாகுபாடின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நமதே இன்ஷா அல்லாஹ்...






 

Saturday, 8 October 2011

ரஹ்மத் ஸ்கூல் முற்றுகை போராட்டம்


  • முத்துப்பேட்டை ரஹ்மத் ஸ்கூல் வெளியிட்ட ஆண்டு மலரில் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேலி சித்திரம் வரைந்து இழிவு படுத்தி வெளியிட்டதை கண்டித்தும்.

  • பள்ளி தாளாளர் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகளை உடனே கைது செய்ய கோரியும்.

  • வெளியிட்ட புத்தகங்களை திரும்ப பெற கோரியும். 

தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் சார்பில் இன்ஷா அல்லாஹ் அன்று நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளது. 







 

Sunday, 28 August 2011

குத்ஸ் தினம்: அரபுலகில் ஃபலஸ்தீன் ஒற்றுமை ஆதரவு பேரணிகள்

குத்ஸ் தினத்தில் அரபுலகம் முழுவதும் இஸ்ரேல் எதிர்ப்பு பேரணிகள் நடத்தி ஃபலஸ்தீன் மக்களுடன் ஒற்றுமை உணர்வை மக்கள் வெளிப்படுத்தினர்.
சவூதி அரேபியாவின் பல்வேறு நகரங்களில் ஃபலஸ்தீன் ஆதரவு பேரணிகள் நடந்தேறின. அவாமியா நகரத்தில் இஸ்ரேல் கொடி எரிக்கப்பட்டது. இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்கள் முழங்கப்பட்டன.

ஈரானின் முக்கிய நகரங்களிலும் ஃபலஸ்தீன் ஆதரவு பேரணிகள் நடைபெற்றன. டெஹ்ரானில் நடந்த பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியதாவது: “மனித சமூகத்திற்கு அவமானம் இஸ்ரேல் ஆகும்.பொய் மற்றும் மோசடி மூலம் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது. உலகிலுள்ள காலனியாதிக்க-மனித விரோத சக்திகளின் அடித்தளமே இஸ்ரேல்தான். மேற்காசியாவில் நிரந்தரமாக பீதியையும், ஸ்திரத்தன்மை இல்லாமையையும் உருவாக்கி காலனியாதிக்க சக்திகளை குடியேறச் செய்கிறது யூத நாடு” என நஜாத் கூறினார்.

ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தலைவரான ஆயத்துல்லாஹ் கொமைனி அவர்களால் 1979-ஆம் ஆண்டு ரமலானின் கடைசி வெள்ளிக்கிழமை குத்ஸ் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இஸ்ரேலுக்கு எதிராக போராடும் ஃபலஸ்தீன் மக்களுக்கு ஒற்றுமை உணர்வை பிரகடனப்படுத்தும் விதமாக குத்ஸ் தினத்தை கடைப்பிடிக்க கொமைனி அழைப்புவிடுத்தார்.





Wednesday, 24 August 2011

ஹஸாரே குழுவினர் டெல்லி இமாமுடன் சந்திப்பு

அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஹஸாரே குழுவினர் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஸய்யத் அஹ்மத் புகாரியை சந்தித்துப் பேசினர்.

ஹஸாரேவின் போராட்டத்தில் முஸ்லிம்களை உட்படுத்தாததற்கு நேற்று முன் தினம் இமாம் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

ஹஸாரே குழுவைச் சார்ந்த கிரண்பேடி, அரவிந்த் கேஜ்ரவால் ஆகியோர் இமாமின் வீட்டில் சந்திப்பை நிகழ்த்தினர். முஸ்லிம்களை போராட்டத்தில் கலந்துக்கொள்ள செய்யாததற்கு இமாம் தனது கடுமையான அதிருப்தியை ஹஸாரே குழுவினரிடம் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்காகவும் களமிறங்க வேண்டும் என ஹஸாரே குழுவினருக்கு இமாம் கோரிக்கை விடுத்தார்.




Tuesday, 23 August 2011

டெல்லி இமாம் கேள்வி: ஹஸாரே மதசார்பற்றவராக இருந்தால் முஸ்லிம்கள் ஏன் அவருடைய குழுவில் இடம்பெறவில்லை !

அன்னா ஹஸாரே மதசார்பற்றவராக இருந்தால் முஸ்லிம்களை ஏன் அவருடைய குழுவில் இடம்பெற செய்யவில்லை என டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் செய்யத் அஹ்மத் புகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதவாதம்தான் ஊழலை விட தேசத்திற்கு அச்சுறுத்தலானது. மதவாதத்தை குறித்து ஹஸாரே வாயை திறப்பதில்லை. ஹஸாரே அவரின் பின்னணியில் செயல்படும் அரசியல் சக்தியிடமிருந்து விடுபடவேண்டும்.

குஜராத்தில் முஸ்லிம்களை கூட்டுப் படுகொலைச் செய்வதற்கு தலைமை வகித்த நரேந்திரமோடிக்கு புகழாரம் சூட்டியவர்தாம் ஹஸாரே. முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு வந்தேமாதரம், பாரத் மாதா கீ ஜெய் போன்ற முழக்கங்கள் எதிரானதாகும். இஸ்லாமிய மார்க்கத்தில் தேசத்தை வணங்கச் சொல்லவில்லை. சில முஸ்லிம்கள் ஹஸாரேவின் போராட்டத்தில் பங்கு பெற்றாலும் கூட அவர்கள் நாட்டின் 25 கோடி முஸ்லிம்களின் பிரதிநிதிகள் அல்லர். இவ்வாறு டெல்லி இமாம் கூறியுள்ளார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More