சற்றுமுன்

Thursday 1 September 2011

இந்திய நிறுவனமான LAC இன் புதிய Smartphone அறிமுகம் !

இந்திய நிறுவனமான லக்சுமி அக்ஸஸ் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இணையதள தலைப்புச் செய்திகளில் வர ஆரம்பித்திருக்கிறது. அதாவது அதன் புதிய டேப்லெட்டைப் பற்றிய அறிக்கை இணையதளங்களை ஈர்த்திருக்கிறது.

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு புதிய ஸ்மார்ட் போனை எஸ்சிஎஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அது உண்மையாகவே இந்தியாவில் நல்ல பெயரைப் பெற்றது. இப்போது எல்சிஎஸ் தயாரிக்கும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கும்.

இந்த புதிய எல்எசிஎஸ் மேக்னம் மிர்ச்சி-5 வரும் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரைச் சேர்ந்த எல்எசிஎஸ் நிறுவனத்தின் புதிய டேப்லெட் கம்ப்யூட்டாரன இது மலிவு விலையில் கிடைக்கும்.

புதிய எல்எசிஎஸ் மேக்னம் மிர்ச்சி-5 டேப்லெட் 5இஞ்ச் கொண்ட திரையுடன் வருகிறது. மேலும் இதன் சிபியு 1ஜிஹச்ஸட் வேகத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு ஆண்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீடு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கும்.

இதன் இன்டர்னல் சேமிப்பு அளவைப் பார்த்தால் அது 512 எம்பி ஆகும். மேலும் இது 512 எம்பி ரேமையும் கொண்டுள்ளது. 5 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் விஜிஎ முகப்பு கேமார கொண்டு இந்த மொபைல் அமர்க்களப்படுத்துகிறது. முகப்பு கேமரா இருப்பதால் வீடியோ காலுக்கு பிரச்சினை இல்லை.
இதனுயை 5 இஞ்ச் டிஸ்பிளே இதற்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. அதனால் இதன் டிஸ்ப்ளே 800 X 480 பிக்ஸல் தெளிவைத் தருகிறது. புதிய எல்எசிஎஸ் மாக்னும் மிர்சி 5 மற்ற ஆண்ட்ராய்டு போன்களைப் போலவே எல்லா வசதிகளையும் கொண்டிருக்கிறது.

புதிய எல்எசிஎஸ் மாக்னும் மிர்சி 5 இன்டக்ரேட்டட் எப்எம் ரேடியாவுடன் ஆட்டோ சுழற்சிக்காக லைட் சென்ஸார், இகம்பாஸ் மற்றும் அக்ஸிலர்மீட்டர் போன்ற வசதிகளை வழங்குகிறது. ப்ளூடூத், வைபை மற்றும் ஹச்எஸ்பிஎ தொடர்பு வசிதிகளும் இந்த போனை அலங்கரிக்கின்றன. மற்ற ஆண்ட்ராட்டு போன்களோடு புதிய எல்எசிஎஸ் மாக்னும் மிர்சி 5 கண்டிப்பாக போட்டிபோட வேண்டியிருக்கும்.

குறிப்பாக எல்ஜி ஆப்டிமஸ் ஒன் அன் ப்ளாக், ஹச்டிசி சாசா, மைக்ரோமேக்ஸ் எ60 சாம்சுங் காலக்ஸி எஸ் மற்றும் ஸ்பைஸ் எம்-410 போன்ற போன்களோடு கடும் போட்டி போட வேண்டியிருக்கும். இருந்தாலம் புதிய எல்எசிஎஸ் மாக்னும் மிர்சி 5 அனைத்துப் போட்டிகளையும் சமாளித்துவிடும் என நம்பலாம். இதன் விலை ரூ.20,000மாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More