இறைத்தூதரை கார்டூன் வரைந்து அவமதித்த முத்துப்பேட்டை
ரஹ்மத் பள்ளி
நிர்வாகிகளை கைது செய்ய கோரி கண்டன
ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
உலக முஸ்லிம்கள்
அனைவருடைய உயிரினும்
மேலாக மதிக்கும்
இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்களது கார்டூன்
எனும் கேலிசித்திரம்
வரைந்து அதை 2010-2011 ஆம் ஆண்டு
கல்வி மலரில்
வெளியிட்டுள்ள முத்துப்பேட்டை ரஹ்மத்
பெண்கள் மெட்ரிகுலேசன்
ஸ்கூலுக்கு எதிராக மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகை போராட்டத்திற்கு தலைமை வகுத்தவர் பா. அப்துல் ரஹ்மான்
(மாவட்ட தலைவர்). கண்டன உரையை மாநில மேலாண்மை குழு உறுப்பினர் பக்கிர் முகமது
அல்தாபி அவர்கள் உரையாற்றினார் நன்றி உரையை அன்சாரி அவர்கள்
உரையாற்றினார்.பள்ளி நிர்வாகத்திற்கெதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
முஸ்லிம்கள் அனைவரும் பாகுபாடின்றி அனைவரும்
ஆயிரத்திற்கும் மேலான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இது
போன்று சமுதாய பிரச்சனைகளுக்கு பாகுபாடின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நமதே இன்ஷா அல்லாஹ்...